திருமணக் கோலத்தில்...ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷபானா
சென்னை: திருமணம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு உருக்கமாக பதிலளித்திருக்கிறார் ஷபானா.
திருமணக்கோலத்தில் ஷபானாவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.
சென்னையில் தான் திருமணம் நடக்கிறது என்று ஷபானா மகிழ்ச்சி பொங்க ரசிகர்களிடம் உருக்கமாக நன்றி கூறியிருக்கிறார்.

சென்னை மருமகள்
செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானாவிருக்கு தற்போது திருமண வைபவம் கூடியிருக்கிறது. இவர் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்று தன்னுடைய ரசிகர்களுக்காக தன்னுடைய திருமணத்தை பற்றி மணக்கோலத்தில் இவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் சென்னையில் மருமகளாக மாறப் போகிறேன் என்று மகிழ்ச்சி பொங்க இவர் ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.

காதல் கைகூடியாச்சி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானாவும், பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஆரியனும் காதலித்து வருவது சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இவர்களுடைய காதலையும் இலை மறை காயாக தான் ரசிகர்களுக்கு வெளிகாட்டி வந்தனர். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து முடித்துக் கொண்டது இன்ஸ்டாகிராமில் தங்களுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.

வைரலான மெஹந்தி பங்க்ஷன் போட்டோஸ்
அதற்கு பிறகு இவர்கள் இருவரிடமும் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு ஆரியன் நாங்கள் சீக்கிரத்தில் ஒரு நல்ல முடிவு சொல்லுவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு சில நாட்களாக ஷபானாவின் மெஹந்தி பங்க்ஷன் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் ஷபானாவுக்கு திருமணமா?? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இதை பற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே என்று ரசிகர்கள் கொஞ்சம் மனவருத்தத்தில் தான் இருந்து வந்தனர்.

வாழ்த்தும் ரசிகர்கள்
ரசிகர்களின் மன குழப்பத்தை தீர்க்கும் விதமாக இன்று இன்ஸ்டாகிராமில் ஷபானா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு இதுவரைக்கும் ஆறுதலும், ஆசீர்வாதங்களையும் அளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும், தான் சென்னையில் இனி வாழப் போகிறேன் என்பதை நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் இதுவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று தன்னுடைய திருமணத்தை பற்றி ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார். அதனால் மணக்கோலத்தில் இவர் ரசிகர்களுக்கு வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் அப்போ சென்னையில் ஷபானாவிற்கு திருமணம்தானா??என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் அள்ளி குவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications