கண்டாங்கிச் சேலையில் எடுப்பாகவும்.. மிடுக்காகவும்.. கலக்கிய ஷிவாங்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருவது சிவாங்கிக்கு புதுசு இல்ல என்றாலும் இந்த மாதிரி ஒரு கெட்டப்பில் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க்கான ரசிகர்கள் அதிகம் தான்.

தேவசேனா கெட்டப்பில் சும்மா புன்னகையாலே மிரட்டி இருக்கும் சிவாங்கியை பார்த்து சிலிர்த்துப் போன ரசிகர்கள் விதவிதமாக கொஞ்சி வருகின்றனர்.

என்னதான் கெட்டப்பு போட்டாலும் இவரை தேடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்காக போஸ்ட் போட்ட சிவாங்கிக்கு வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.

 மனம் கவர்ந்த குக் வித் கோமாளி

மனம் கவர்ந்த குக் வித் கோமாளி

எப்படா இந்த குக் வித் கோமாளி மூன்றாவது சீசனை தொடங்குவார்கள் என ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போ இரண்டாவது சீசனில் செலிப்ரேஷன் ஒளிபரப்ப போகிறது. அதுவும் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் படும் என்பதை பிரேமோவில் தெரிவித்ததும் பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கிடக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணி கொண்டிருந்தனர். சீரியல்கள் என்றாலே அழுகை ,பொறாமை ,துரோகம் இதையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி ரொம்பவே பிடித்து இருக்கின்றது .அதனால் தான் பலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.

குட்டி இளவரசி

குட்டி இளவரசி

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன் முடிவடைந்தாலும் அதற்குப் பிறகு எப்போது அடுத்த சீசன் தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள். அந்த மாதிரி தான் இப்போது இரண்டாவது சீசனில் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். காரணம் அந்த சீசனில் கலந்துகொண்ட கன்டஸ்டன்ட்களும் தான். அதில் பலர் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த கேரக்டராக சிவாங்கி இருந்து கொண்டிருக்கிறார். இவரை இந்த இரண்டாவது சீசன் முடிவடைந்த பிறகு ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வந்தனர். அதனால்தான் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார் . அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் லைவில் அடிக்கடி வந்து ரசிகர்களின் கேள்விக்கு தன்னுடைய ஜாலியான கமெண்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போ இனி கொண்டாட்டம் தான்

அப்போ இனி கொண்டாட்டம் தான்

தற்போது மீண்டும் விஜய் டிவியில் செலிப்ரேஷன் ரவுண்டு நடப்பதால் அதில் சிவாங்கி கலந்து கொள்வாரா என அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். ஆனால் இப்போது இவர் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் அதில் செமையான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். சும்மாவே இவர் கலக்குவார் இப்போ கொடுத்திருக்கிற கெட்டப் வேற லெவலில் இருக்குறப்போ இவருடைய ஆட்டத்தை பார்க்க பெரும் கொண்டாட்டம்தான் என எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தன்னுடைய குழந்தைத்தனமான குறும்பு தனத்தால் இந்த அளவில் மனக் கவலையில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைத்து விடுவது தான் இவருடைய சிறப்பு.

அது மட்டும் மிஸ்ஸிங்

அது மட்டும் மிஸ்ஸிங்

அதுவும் ஒவ்வொருமுறையும் சிவாங்கி வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருவார். அதுபோலத்தான் தற்போதும் இவர் ராஜமாதா கெட்டப்பில் வந்திருக்கிறார். அதை அப்படியே ஒரு போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட ஒரு சில நேரத்திற்கு லைக் பட்டன் தெரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கமெண்ட்ஸ்களும் மலை போலவே உயர்ந்து வருகிறது. அதுவும் இவருடைய இந்த லேட்டஸ்ட் கெட்டப்புக்கு பக்கத்தில் சிம்மாசனம் மட்டும்தான் மிஸ்ஸிங்காம். அதனால் அதைக் கொண்டு வாங்க முதல்ல என்று இவருக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள் அலும்பு தாங்கல. எப்படிலாம் இவருடைய இவரது அழகை புகழ்ந்து தள்ளலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல அந்த அளவிற்கு விதவிதமாக வர்ணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+