டைட் உடையில், ரசிகர்களை டைட் ஆக்கிய ஷிவானி...என்ன பார்வை டா இது??
சென்னை : உடலோடு ஒட்டி உறவாடும் டைட்டான உடையில் ரசிகர்களின் மனதை குளிர வைத்த ஷிவானிக்கு ஹாட்டின்கள் பறக்கிறது.
கெத்தாக போஸ் கொடுத்து மாஸ் காட்டியிருக்கும் ஷிவானியை பார்த்ததும் மளமளவென கமெண்டுகள் உயர்கிறது.
இந்த மாதிரி பார்த்து எத்தனை நாளாச்சு...வா தலைவி என சிவப்புக் கம்பளத்தை விரித்து ரசிகர்கள் சிவப்பு ஹார்டின்களை பரப்பி வருகிறார்கள்.

என்ன. ..ஒரு லுக்கு
அடடா மனம் அலை பாய்கிறதே ஷிவானியை இவ்வளவு டைட்டாக பார்க்கும்போது, என்று பலர் காலை வேளையில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து புலம்பி வருகின்றனர். உடலோடு ஒட்டியபடி இவர் அணிந்திருக்கும் உடையை பார்த்ததும் எப்படி இவ்வளவு சிக்கென்று மாறிவிட்டார் ஷிவானி என்று பலபேர் கேள்விகளைக் கேட்டாலும், இதற்கு எல்லாம் ஜிம் தான் காரணமா? நாங்களும் வரலாமா? இப்படி மாறுவதற்கு..என்று பலர் நூல் விட்டு வருகின்றனர். முறைத்தபடி இவர் நிற்க அதைக் கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்டுகளை கொட்டுகிறார்கள். இப்படியே ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பிக் கொண்டிருந்தால் இன்ஸ்டாகிராம் கேங்க் ஆகாமல் என்னதான் செய்யும் என்று சிலர் கூறிவருகின்றனர். ஏற்கனவே நேற்று முழுக்க இன்ஸ்டாகிராம் ஸ்லோவாக மாறியதற்கு ஷிவானியின் ரசிகர்கள் தான் காரணமாக இருக்குமோ என்று சிலருக்கு சந்தேகம் வருகிறதாம்.

மாஸாக மாறிவிட்டாரே
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் பாவாடை தாவணியில் பார்த்த அதே ஷிவானியா, இப்போது பில்லா படத்தில் நயன்தாராவின் கெட்டப்பை அடித்து தூக்குற மாதிரி களமிறங்கியிருக்கிறார் என்று பலர் கேட்டிருக்கின்றனர். எப்படியோ சீரியலை விட்டு விலகி இருந்தாலும் வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார் என்று இவருடைய ரசிகர்கள் ஆனந்தத்தில் இருக்கும் போது இவருடைய திரைப்படம் சூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என்று ஷிவானியிடம் கேட்டு வருகின்றனர். வழக்கம்போல அதற்கு ஷிவானி எந்த பதிலை கூறாவிட்டாலும் கண்டுகொள்ளாத ரசிகர்கள் கேள்விகளை மட்டும் அம்பு போல ஏய்து வருகின்றனர். ஆனால் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தான், திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதை மட்டும் கூறியிருந்தார். ஆனால் யாருடன் எந்த திரைப்படத்தில் என்பதை ஷிவானி சொல்லாததால் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

அத மட்டும் சொல்லலையே
ஆனால் ஷிவானி விஜய்சேதுபதியின் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது மட்டும் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனாலேயே பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் இன்ஸ்டாகிராமில் அனுப்பி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஷிவானி பதில் மட்டும் கூறவில்லை. ஷிவானுக்கு நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் அத்துப்பிடித்தான். இவர் ஸ்கூல் படிக்கும் போதே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம். அதனால்தான் ஸ்கூல் டைமில் டிக்டாக்கில் வலம்வர ஆரம்பித்திருக்கிறார். டிக் டாக்கில் பல வீடியோக்களை இவர் டான்ஸ் ஆடியும் தன்னுடைய அழகான புகைப்படத்தை பதிவிட்டும் எடுத்திருந்தார். இதை பார்த்து தான் இவருக்கு பகல் நிலவு சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் முதல் சீரியலில் ரசிகர்கள் மனதில் பசை போல ஒட்டி விட்டார்.

எப்போதுமே குறையாத மவுசு
பொதுவாக பல சீரியல்களில் நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் தனக்கு வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர்கள் ஆகவே இருந்த காலகட்டத்தில் ஷிவானி பிரஷ்ஷாக புதுமுகமாக இளம் கதாநாயகிகளுக்கு போட்டிபோடும் அழகில் பகல் நிலவு சீரியல் என்ட்ரி கொடுத்ததும் ரசிகர்கள் இவரை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். முதல் சீரியலில் இவர் இளைஞர்களின் மனதை வசப்படுத்தி விட்டார். அதனாலேயே பலருடைய வாட்ஸ்அப் டிபி களில் இவருடைய போட்டோஸ்கள் இருந்து வந்தது. சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் அதிகம் தான். தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் அதற்கு பல ரசிகர்களால் கமெண்ட்களை அனுப்ப முடியாத அளவிற்கு சூடாகி விட்டார்களாம். அதனாலேயே தீப்பொறி பறக்கும் இமோஜி களை கமெண்ட் பாக்ஸில் கொளுத்தி வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால் அந்தப் பாக்ஸ் எப்ப வெடிக்க போகுதோ தெரியலையே...












Click it and Unblock the Notifications