Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siragadikka Aasai : நான் கிரிஷ் அம்மா, உண்மையை சொன்ன ரோகிணி! அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி மனோஜிடம் நான் தான் கிரிஷ் அம்மா என்று உண்மையை சொல்லி இருக்கிறார். அதேபோல கிரிஷ் விஷயத்தில் அண்ணாமலைக்கு சில சந்தேகங்கள் வந்திருக்கிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் கோவாவிற்க்கு போயிட்டு வந்த ரவி பெட்டியில் இருந்து தன்னுடைய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது நீத்துவின் ட்ரஸ் ஒன்று அதில் இருக்கிறது. அதை பார்த்த ஸ்ருதி உடனே நீத்துக்கு போன் போட்டு உங்க டிரஸ் ஒன்னு தவறுதலா ரவி சூட்கேஸ்க்கு வந்துவிட்டது. அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதை கேட்டதும் நாம அவங்களுக்குள்ள சண்டையை மூட்டி விட ட்ரெஸ்ஸை வச்சா இவ நமக்கே போன் பண்ணி சொல்லுறாளே என்று நீத்து குழப்பத்தியில் இருக்கிறார். ரவி ஏன் இப்படி பண்ணுன என்று கேட்க, உனக்கு புரியாது ஆனா அவங்களுக்கு புரியும் என்று ஸ்ருதி முடித்து விடுகிறார். அடுத்ததாக ரோகிணி சந்தோஷமாக இருக்கிறார்.

அங்கு வரும் மனோஜை கட்டிப்பிடித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். அதை பார்த்து மனோஜ் என்ன ஹேப்பியா இருக்க என்று கேட்க, கிரிஷ் ஸ்கூலுக்கு வந்ததை பற்றி சொல்கிறார். அவன் யாரோ ஒருத்தன் அவனுக்காக செய்ததற்காக எதுக்கு நீ சந்தோஷப்படுற என்று கேட்க, அதற்கு ரோகிணி அவன் அம்மா நான் தானே என்று உண்மையை உலறுகிறார்.

இதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைய, உடனே ரோகிணி கல்யாணி பேயாக மாறி சமாளித்து விடுகிறார். பிறகு கிரிஷ் இனிமே உன்னை டாடினு தான் கூப்பிடுவான். நீ தான் வீட்ல சமாளிக்கணும், என் குழந்தை அனாதையாக இருக்கிறது. அதனால் உன்னை அப்படித்தான் கூப்பிடுவான் என்று சொல்ல அதை கேட்டு மனோஜ் அடுக்கடுக்காக கேள்வி கேட்க அதற்கு ரோகிணி மயங்கி விழுந்து விடுகிறார்.

பிறகு அடுத்த நாள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரோகிணி கிரிஷிடம் கண்ணைக் காட்ட, கிரிஷ் மனோஜை, டாடி என்னை ஸ்கூல்ல விடுறீங்களா? என்று கேட்க மொட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இதை கேட்டு கடுப்பான விஜயா நீ யாருடா என் புள்ளையை போய் இப்படி டாடினு கூப்பிடுகிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை கிரிஷை அருகில் அழைத்து உன்னை யாரு அப்படி கூப்பிட சொன்னா என்று கேட்க, அவர் ரோகிணியை கை காட்டுகிறார். மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது. அதற்கு ரோகிணி இந்த பையன் பொய் சொல்றான் என்று கிரிஷை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறார். அதனால் மீனா டென்ஷன் ஆகிறார். அதனால் மனோஜ் ரோகிணி சொல்லல வேற ஒரு நபர் என்று சமாளித்து விடுகிறார்.

Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு சந்தேகம் வருகிறது. விஜயா வாயை அடைச்சாச்சு ஆனால் இதில் ஏதோ இருக்கிற மாதிரி தோணுது. நீ கிரிஷின் பாட்டிக்கு போன் பண்ணி பேசு என்று முத்துவிடம் சொல்கிறார். கிரிஷ் விஷயத்தில் இருக்கும் மர்மம் இப்போது அண்ணாமலைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறகடிக்க ஆசை: கிரிஷ்க்கு அப்பாவாக மாறிய மனோஜ்.. ஸ்ருதி கண்ட காட்சி! உடையும் அண்ணாமலை குடும்பம்?
அதைத் தொடர்ந்து மீனா ரோகிணியை தனியாக சந்தித்து நீ பேயாக நடித்து ஏமாத்திட்டு இருக்குறது எனக்கு தெரியும். எப்ப தான் உண்மையை சொல்ல போற? நீ சொல்லிவிட்டால் நானும் நிம்மதியாக இருப்பேன். இன்னைக்கு சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று சொல்ல, ரோகிணி பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+