Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு துரத்தப்பட்ட ரோகிணிக்கு, தோழி மூலமாக புது பிரச்சனை! மீனாவுக்கு கிடைத்த தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி பற்றிய உண்மையை மறைத்ததற்காக மீனாவை மொத்த குடும்பத்தினரும் கேள்வி கேட்டு திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போன ரோகிணிக்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ரோகிணி பற்றிய உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வந்து இருக்கிறது. முத்து தான் வழக்கம் போல ரோகிணி பற்றிய உண்மையை கண்டுபிடித்திருக்கிறார். ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்துவிட்டது, அவருடைய மகன்தான் கிரிஷ் என்ற உண்மை தெரிந்ததும் விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்தி இருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ரோகினி வீட்டை விட்டு போகிறபோது மீனாவுக்கு இந்த உண்மை தெரியும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதனால் எல்லோர் கோபமும் மீனாவை நோக்கி திரும்புகிறது. நீங்க ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள் தானா? என்று விஜயா கோபப்படுகிறார். அதோடு இவளையும் வீட்டை விட்டு துரத்தனும் என்று சொல்கிறார். அது மட்டும் இன்றி நீங்க கூட்டிட்டு வந்த மருமகள் உங்ககிட்ட உண்மையை மறைச்சிருக்கா என்று அண்ணாமலையிடமும் ஏத்தி விடுகிறார்.

அப்போது மீனா மன்னிப்பு கேட்க, அதை முத்துவும் அண்ணாமலையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் என்ன செல்வது என்று தெரியாமல் அழுது கொண்டு தனியாக நிற்கிறார். அனைவரும் தனித்தனியாக அவர்களுடைய ரூமுக்கு போய்விடுகிறார்கள். மறுபக்கம் இந்த வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றிய ரோகிணி தன்னுடைய தோழி மகேஸ்வரி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மகேஸ்வரி உனக்கு மீனா டைம் கொடுத்திருந்தாங்களே அப்புறம் எப்படி அவங்க முத்துவிடம் சொன்னாங்க என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு ரோகிணி அதுதான் எனக்கும் தெரியல, ஆனா இனி என்ன பண்ண போறேன்னு தெரியல, அந்த குடும்பத்தில் யாருமே எனக்கு சப்போர்ட்டா இல்லை என்று அழுது கொண்டிருக்கிறார்.

அதோடு இன்னும் கொஞ்ச நாள் உங்க வீட்டில் தங்கிக் கொள்ளவா என்று கேட்க, அதற்கு மகேஸ்வரி சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அவருடைய கணவர் மகேஸ்வரியை தனியாக அழைத்து சென்று கோபமாக பேசுகிறார். ரோகிணி இந்த வீட்டில் இருந்தால் நமக்கு தான் பிரச்சனை. நாளைக்கே கோர்ட் கேஸ்னு வந்தா போலீஸ் உன்னைய தான் விசாரிப்பாங்க. அதனால அவங்கள இங்க இருக்க வைக்க முடியாதுன்னு சொல்லிரு என்று சொல்ல இதையெல்லாம் ரோகிணி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அதனால் ரோகிணி அங்கிருந்து கிளம்பி வித்யா வீட்டிற்கு போகிறார். அப்போது வித்யாவின் கணவர் முருகனிடம் எல்லா விஷயத்தையும் வித்யா சொல்கிறார். அதற்கு முருகன் நமக்கு கல்யாணம் நடத்தி வைத்ததே முத்து அண்ணன் தான். அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நம்மை தப்பா நினைப்பாங்க என்று சொல்லி, ரோகிணி இங்க தங்க வைக்க முடியாது என்று சொல்லி விடுகிறார்.

இதற்கிடையில் மனோஜ் வீட்டில் தன்னுடைய ரூமுக்கு போனபோது அங்கு தன்னுடைய கல்யாண போட்டோவை பார்த்து பழைய விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறார். அப்போது ரோகினியிடம் நான் எந்த விஷயத்தையும் மறைத்ததே இல்லை, எனக்கு கிடைச்ச மாதிரி பொண்டாட்டி எந்த உலகத்துல யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்க என்றெல்லாம் மனோஜ் பேசியதை நினைத்து பார்க்கிறார்.

பிறகு ஒரு நிகழ்ச்சியில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் கலந்து கொண்ட போது அங்கு இருந்த நடுவர்கள் புருஷன் பொண்டாட்டி என்றால் அடிக்கடி சண்டை வரவேண்டும், விட்டுக்கொடுத்து போக வேண்டும்.. அப்படி இருந்தால் தான் நல்ல புருஷன் பொண்டாட்டி. ஆனால் சண்டையே வராமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் ஏதோ மறைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம் என்று சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து தன்னுடைய கல்யாண போட்டோவை கிழித்து எதுக்காக டி என்னை ஏமாத்துன என்று அழுது கொண்டிருக்கிறார்.

அப்போது விஜயா வந்து நீ இனி அவளை நினைச்சு கவலைப்படாத, அவளை டைவர்ஸ் பண்ணிட்டு உனக்கு வேற ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+