சிறகடிக்க ஆசை: இன்று நடந்த சம்பவம் பலருக்கு பாடம்.. மீனாக்கு கிடைத்த தண்டனை! விபரீத முடிவு எடுத்த ரோகிணி
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் அனைவரும் எதிர்பார்க்காத திருப்பம் தான் வந்திருக்கிறது. வீட்டை விட்டு துரத்தப்பட்ட ரோகிணிக்கு அவருடைய நெருங்கிய தோழிகளே உதவி செய்ய மறுத்து விட்டனர். இதுவரைக்கும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் எல்லோரும் அவரை கைவிட்ட நிலையில் இப்போது சிந்தாமணி ரோகிணிக்காக உதவிக்கு வந்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள், ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் என்று.. அதுதான் இப்போ அண்ணாமலை குடும்பத்திற்கும் வந்திருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகளை மறைத்ததற்காக மீனாவிற்கும் முத்து தண்டனை கொடுத்து இருக்கிறார். ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததுமே மீனா முத்து விடம் சொல்லி இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்கவே செய்யாது.

ஒவ்வொரு நேரமும் தியாகி போல நடந்து கொள்ளும் மீனாவிற்கு இப்போது சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வீட்டை விட்டு துரத்தப்பட்டதால் அவர் தன்னுடைய தோழி மகேஸ்வரி வீட்டுக்கு போயிருந்தார். ஆனால் அங்கு அவருடைய கணவர் இவங்களை நம்ம வீட்டில் வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
அதைத்தொடர்ந்து வித்யா வீட்டிற்கு போய் இருந்தார். வித்யா தான் ஆரம்பத்தில் இருந்து ரோகிணிக்கு நல்ல பிரண்டாக நடந்து கொண்டார். அதோடு அவருடைய திருட்டுத்தனத்தை எல்லாம் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது ரோகிணியை வீட்டில் சேர்த்தால் முத்து அண்ணன் குடும்பத்தோடு நம்முடைய உறவுமுறிந்து விடும் என்று முருகன் முடியாது என்று சொல்லிவிட்டார்.

உடனே வித்யாவும் ரோகிணியிடம் என்னால் உனக்கு உதவ முடியாது, நான் உன்னை மாதிரி என் புருஷன் கிட்ட உண்மையை மறைக்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து ரோகிணி விஜயாவின் பிரண்டான பார்வதி வீட்டுக்கு போகிறார். அங்கு பார்வதி ரோகிணியிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இதை வச்சுக்கோ ஆனா என்னால உன்னை இங்க தங்க வைக்க முடியாது என்று சொல்கிறார்.
உன்னை இங்கு தங்க வச்சா விஜயா கோவிச்சுக்கவாள். ஏற்கனவே எனக்கும் அவளுக்கும் ஒரு பிரச்சனை இருக்கு, ஆனா ஒரு நாள் நாங்க சேருவோம்னு நம்புறேன்.. ஆனால் இந்த நேரத்தில் உன்னை நான் வீட்டில் சேர்த்து வைத்தால் அவளை பழிவாங்கா தான் உர்னை சேர்த்ததாக நெனச்சுக்குவ, அதனால முடியாது என்று சொல்கிறார். உடனே ரோகினி சிந்தாமணி வீட்டுக்கு போகிறார்.
அங்கு சிந்தாமணி விஷயத்தை சொன்னதும், சிந்தாமணி ரோகிணியை சாப்பிட சொல்கிறார். அப்போது ரோகிணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சிந்தாமணி ரோகிணிக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு என்னுடைய தங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி நீ செஞ்சது ஒன்னும் தப்பு கிடையாது என்று சொல்கிறார்.
மனோஜ் கூட வாழ்ந்துட்டு இருக்கும்போது இன்னொருத்தான கூட பழகிக்கொண்டு இருந்தால்தான் அது தப்பு... ஆனா நீ இப்படி பண்ணலையே.. உன்னுடைய முதல் வாழ்க்கை பாழாபோயிடுச்சு, அதற்காக அப்படியே இருக்க முடியும்? நீ அவன் கூட சேர்ந்து வாழணும்னு தானே இவ்வளவு பொய் சொன்னே? இன்னைக்கு மனோஜ் நல்ல நிலைமையில் இருக்கிறானா அதற்கு காரணம் நீதான் என்று சிந்தாமணி சொல்ல, ரோகினி அதற்கு நன்றி சொல்ல நீ எவ்வளவு நாள் வேணாலும் இங்கே தங்கிக்கோ என்று சிந்தாமணி சொல்கிறார்.
சிந்தாமணி இப்படி செய்வதற்கு காரணம் விஜயாவின் வீட்டை எழுதி வாங்கி முத்து மற்றும் மீனாவை பழி வாங்குவதற்காக தான் சிந்தாமணி பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்து சோகமாக இருக்க, அப்போது மீனா முத்துவை சாப்பிட கூப்பிடுகிறார். அதற்கு முத்து மீனாவிடம் நறுக்குன்னு கேள்வி கேட்கிறார்.

நான் தான் உன்ன நல்ல பொண்டாட்டின்னு நினைச்சுட்டு இருக்கிறேன், என்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனா நீ ஒவ்வொரு விஷயத்தை என்னிடம் மறைச்சிட்டு இருக்க.. உன் தங்கச்சி விஷயத்தை மறைச்ச, இப்போ நம்ம குடும்பத்துக்கு துரோகம் பண்ணின ரோகிணி பற்றி சொல்லாமல் மறைச்சிருக்க என்று திட்ட மீனா தலைகுனிந்து நிற்கிறார்.
கடைசியாக மனோஜ் குளித்துக் கொண்டிருக்கும் போது ரோகினி தன்னை ஏமாற்றியதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். அதோடு தன்னுடைய கடையில் வேலை பார்ப்பவர்கள், முத்து, மீனா, விஜயா என எல்லோரும் தன்னை அசிங்கப்படுத்தி கிண்டல் செய்வதாக நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications