சிறகடிக்க ஆசை: மீனா செய்த செயல், சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி நிலைமை அவ்வளவுதான்! முத்து சப்போர்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை விஜயா செய்து கொண்டிருக்கும்போது மீனா பதட்டத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial March 13 episode) ஆரம்பத்தில் மீனாவின் தம்பி சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மீனா, முத்து மற்றும் சீதா ஆகியோர் அங்கு வந்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக சத்யாவின் ஓனர் மகள் ரேகா அங்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார். சத்யாவுக்கு கேக் மற்றும் விலையுயர்ந்த டிரஸ் வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பும் முன், "உங்களுடைய பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். இன்று மதியம் ஒரு ஹோட்டல் புக் பண்ணியிருக்கேன். அங்கு வந்து சந்திக்கவும்" என்று சொல்லிவிட்டு ரேகா அங்கிருந்து போகிறார். இந்த விஷயத்தை முத்துவும் மீனாவும் கேட்டு விடுகிறார்கள்.
மீனாவின் பயம்
ரேகா போன பிறகு முத்து மற்றும் மீனா சத்யாவை அழைத்து பேசுகிறார்கள். "நீ அந்த பெண்ணை காதலிக்கிறியா?" என்று கேட்க, சத்யா தயங்காமல் "ஆமாம்" என்று சொல்லிவிடுகிறார். முத்து உடனே சத்யாவின் காதலுக்கு ஓகே சொல்கிறார். ஆனால் ரேகா பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பதால் இந்த காதலை ஏற்க மீனா பயப்படுகிறார்.
முத்து கொடுத்த அட்வைஸ்
அப்போது முத்து மீனாவிடம் பேசுகிறார். "அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் தெரியுது. அப்புறம் என்ன பிரச்சனை?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "காதல் வேண்டுமானால் வசதியை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் கல்யாணம் பார்க்கும்போது பார்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கும்" என்று சொல்கிறார். அதற்கு முத்து, "அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். சத்யா நீ தைரியமா காதலை சொல்லு. நான் உனக்கு இருக்கேன்" என்று சப்போர்ட் செய்கிறார்.
இதற்குப் பிறகு சத்யா ரேகாவை பார்க்க ஹோட்டலுக்கு போகிறார். அங்கு சென்றதும் நேராக ஒரு பூவை கொடுத்து ரேகாவிடம் தனது காதலை சொல்லுகிறார். அதைக் கேட்டதும் ரேகா நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார். "நான் தான் படபடப்பா இருந்தேன். இப்போ ரொம்ப ஹாப்பி" என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் ரேகாவின் அம்மா சிந்தாமணி அவருக்கு போன் செய்கிறார். ரேகா போனை எடுத்து பேசும்போது "நான் ஃப்ரெண்டோடு இருக்கேன்" என்று சொல்கிறார். அதற்கு சிந்தாமணி "பையனா? பொண்ணா?" என்று தொடர்ந்து கேள்வி கேட்கிறார். இதனால் கோபமான ரேகா போனை கட் செய்து விடுகிறார்.
சந்தோஷத்தில் விஜயா
மறுபுறம் வீட்டில் விஜயா தனது மகன் மனோஜை பார்க்க பெண் வீட்டார் வருவதால் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் பெண் வீட்டார் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை அமர வைத்து மனோஜையும் அழைத்து காட்டுகிறார். மனோஜை பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிடுகிறது.
அப்போது அண்ணாமலை ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை அவர் நேராக சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பெண் வீட்டார் தங்கள் பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அதனால் இப்படிப்பட்ட வரன் தான் தேடிக் கொண்டிருந்தோம் என்றும் கூறுகிறார்கள். இதைக் கேட்ட விஜயாவும் மனோஜும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். பின்னர் அவர்கள் "நாளைக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறோம்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
இதற்குப் பிறகு விஜயா "கோவிலுக்கு போயிட்டு வருகிறேன்" என்று சொல்லி வீட்டிலிருந்து செல்கிறார். கோவிலில் அந்த நேரத்தில் மீனாவும் ஸ்ருதியும் சேர்ந்து அடி பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மீனா இந்த பிரார்த்தனையை செய்கிறார்.
அப்போது அங்கு விஜயா வருகிறார். மீனாவையும் ஸ்ருதியையும் பார்த்துவிடுகிறார். "நீங்க எதுக்காக கோவிலுக்கு வந்தீங்க?" என்று ஸ்ருதி கேட்க, விஜயா மனோஜுக்கு பெண் பார்க்கப் போகிற விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதை கேட்டதும் மீனா அதிர்ச்சியாக நின்று விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications