சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 14ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணுவதற்காக பொண்ணு பார்த்திருந்த நிலையில் கடைசியில் அந்த திருமணம் நின்று போய் விடுகிறது. அதே நேரத்தில் முத்துவால் மனோஜ்க்கு குழப்பம் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை விவாகரத்து செய்வதற்கு முன்பே மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று விஜயா தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சாமியார் ஒருவரின் உதவியுடன் ஒரு பெண் வரன் வந்திருக்கிறது அது பற்றி விஜயா வீட்டில் சொன்னதும் அண்ணாமலை அந்த குடும்பத்தினரிடம் மனோஜ்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லி இருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் எங்க பொண்ணு ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது அதனால் எங்களுக்கு இந்த கல்யாணத்தில் ஓகே தான் என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா கோவிலுக்கு வருகிறார். அதே நேரத்தில் மீனாவும் ஸ்ருதியும் கோவிலில் அடிபூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது விஜயாவை பார்த்ததும் ஸ்ருதி என்ன ஆன்ட்டி இங்கே வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா நான் மனோஜ்க்கு இப்போ பொண்ணு பார்க்க போகிறோம் அதனால நல்ல நேரம் குறிக்கிறதுக்காகத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதோடு நான் நல்ல விஷயம் செய்றதுக்காக இங்கே வந்தேன் ஆனால் இப்போ இவ முகத்துல முழிச்சிட்டு போறேன் இனி என்ன ஆகப்போகுதுன்னு தெரியல என்று வழக்கம்போல மீனா திட்டிக்கொண்டு அங்கிருந்து போகிறார்.
விஜயா போனதும் ஸ்ருதி மீனாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல விடுங்க ஸ்ருதி நான் அத்தை பேசுவதெல்லாம் பெருசா எடுத்துக்கிறதே இல்லை என்று மீனா பெருந்தன்மையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து பொண்ணு பார்க்கும் வீட்டில் மனோஜும் கல்யாண பொண்ணும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜிடம் அந்த பெண் உங்களுடைய முதல் திருமணம் எதனால் பிரேக்கப் ஆட்சி என்று கேட்க, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான்.. அவங்க அவங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க அதனாலதான் எங்களுக்குள்ள பிரிவு வந்தது என்று சொல்கிறார்.
சந்தோஷத்தில் மனோஜ்
பிறகு நீங்க கல்யாணத்திற்கு பிறகு வேலை பார்ககுறதா இருந்தா போகலாம், நான் யாரையும் தடுக்க மாட்டேன் என்று மனோஜ் சொல்கிறார். இதனால் அந்த பெண்ணுக்கும் பிடித்து விடுகிறது. பிறகு எல்லோரும் குடும்பமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக கல்யாணத்தை பற்றி முடிவு எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு ஒரு பெரியவர் வருகிறார். அவரிடம் மாப்பிள்ளை அறிமுகம் செய்து வைக்க அவர் விஜயா விட உங்களுக்கு எந்த ஊரு என்று விசாரிக்கிறார்.
நின்னு போன கல்யாணம்
பிறகு விஜயாவும் மணப்பெண்ணின் அம்மாவும் அக்கா தங்கச்சி உறவுமுறை வரும், அதனால இந்த கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் மனோஜ் விஜயாவும் வீட்டிற்கு வருகின்றனர். பிறகு மனோஜ் முத்து மற்றும் ரவிக்கு குடிக்க வாங்கி கொடுத்து அவரும் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு கல்யாணம் நின்னு போனது வருத்தமா இருக்கு என்று மனோஜ் புலம்பி கொண்டு இருக்க அதற்கு முத்து நான் உனக்கு என்னுடைய பிரண்டோட கதையை சொல்லுறேன் என்று ஒரு படத்தில் கதையை சொல்கிறார்.
முத்து சொன்ன கதை
என் பிரண்ட் ஒரு பொண்ணை காதலிச்சான் அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தை இருந்தது. அவன் அந்த குழந்தையோடு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். கொஞ்ச நாள் போச்சு அப்புறம் இவனுடைய பையன் என் பிரண்டோட வளர்ப்பு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்போ உறவு முறையே மாறிப்போச்சு என்று ஒரு சிக்கல் ஆனா கதையை சொல்ல, அதைக் கேட்டு மனோஜ் இன்னும் குழப்பத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications