சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 23, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடில் சீதாவின் தாலியை திருடி சென்ற போலி சாமியாரை மீனா பிடிக்கிறார். ஆனால் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த போலி சாமியாரால் சீதா வாழ்க்கையிலும், மீனா வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் புது பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode), முத்து புதிதாக ஒரு வேன் வாங்கியிருந்ததால், அதற்கு பூஜை செய்வதற்காக குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கேயே சீதாவும் வருகிறார். பூஜை முடிந்த பிறகு, அனைவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது, சீதா அமைதியாக நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில், அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை ஒரு பெண் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவசரமாக ஓடும் அந்த பெண், முன்பாக வந்த மீனாவை இடித்துவிட்டு தப்பிக்கிறார். முக்காடு போட்டிருந்ததால், அந்த பெண்ணின் முகத்தை மீனா கவனிக்க முடியவில்லை.
மீனாவுக்கு தெரிந்த உண்மை
பின்னர் மீனா கோவிலுக்குள் சென்று பார்க்கையில், சீதா பதற்றமாக அழுதுகொண்டிருப்பதை கவனிக்கிறார். என்ன ஆச்சு என்று கேட்டபோது, தாலி காணாமல் போனதை சீதா சொல்லுகிறார். வீட்டிலேயே மறந்து விட்டு வந்தாயா என்று மீனா கேட்க, "இல்லை, நான் கோவிலுக்குள் வரும்போது கூட அது கழுத்தில் இருந்தது" என்று சீதா உறுதியாக சொல்கிறார். அப்போது தான் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது - தன்னை இடித்துவிட்டு ஓடிய அந்த பெண்ணே திருடன் என்று.
சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்
இதையடுத்து மீனா உடனே வேகமாக கோவிலில் இருந்து வெளியே ஓடிச் சென்று அந்த பெண்ணை துரத்துகிறார். தன்னை யாரோ பின்தொடர்வதை உணர்ந்த அந்த பெண் இன்னும் வேகமாக ஓடுகிறார். இறுதியாக ஒரு கடை முன்பாக அவளை மீனா பிடித்துவிடுகிறார். அவளது முக்காடை விலக்கி பார்க்கும் போது, மீனாவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண் வேறு யாரும் இல்லை - விஜயா வீட்டுக்கு பூஜை செய்ய வந்திருந்த சாமியார் தான்.
தப்பித்த போலி சாமியார்
"நீ ஒரு திருடியா?" என்று மீனா கேட்க, அந்த பெண் மீனாவின் கையை தட்டி விட்டு மீண்டும் தப்பிக்கிறார். உடனே மீனா கோவிலுக்குத் திரும்பி, முத்து, அண்ணாமலை, விஜயா ஆகியோரிடம் நடந்ததை சொல்லுகிறார். சீதாவின் தாலியை திருடியது அந்த சாமியார் தான் என்று உறுதியாக கூறுகிறார்.
விஜயா சொன்ன விஷயம்
இதைக் கேட்ட விஜயா கடும் அதிர்ச்சியடைந்தாலும், உடனே அதை மறுத்து, "அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் தெரியுமா? நீ பொய் சொல்லுற. வீட்டுக்குள் வரணும்னு கதை கட்டுற" என்று மீனாவை குற்றம் சாட்டுகிறார். இதனால் கோபமடைந்த முத்து, "அந்த பெண் திருடி என்று நிரூபித்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்கிறார். அதற்கு விஜயா, "அப்படி நிரூபிச்சா நான் மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துக்கொள்வேன்" என்று சவால் விடுகிறார். முத்துவும் அதை ஏற்றுக்கொள்கிறார்.
முத்து கண்டுபிடித்த விஷயம்
பிறகு முத்து மற்றும் மீனா சேர்ந்து, அந்த பெண் பிடிபட்ட இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு இருந்த கடையின் சிசிடிவி கேமராவை பார்த்து விசாரிக்கிறார்கள். வீடியோவில் அந்த பெண்ணின் முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவள் ஓடும் போது, அவளது பர்ஸ் கீழே விழுந்திருப்பது தெரிய வருகிறது. அதை அவர்கள் எடுத்து பார்க்கையில், உள்ளே ஒரு அட்ரஸ் கிடைக்கிறது.
சீதாவை அடித்த அருண்
அந்த அட்ரஸை வைத்து அவர்கள் அந்த இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு முத்துவின் நண்பர் ஒருவர் இருப்பதை பார்த்து, அவரிடம் அந்த அட்ரஸை காட்டி விசாரிக்கிறார்கள். அதற்கு அவர், "அது சாதாரண இடம் இல்லை. திருட்டு நகைகளை விற்கும் மிகவும் ஆபத்தான இடம். அங்கு ஈசியாக யாரும் போக முடியாது" என்று எச்சரிக்கிறார்.
இதற்கிடையில், இன்னொரு பக்கம் சீதா வீட்டுக்கு போகிறார். தாலியை தொலைத்து விட்டு வந்ததை அறிந்த அருண் கடும் கோபமடைகிறார். " என்னை கூப்பிடாத இடத்துக்கு நீ ஏன் போனா? அந்த தாலி என் அம்மாவின் நினைவுச்சின்னம். அது இல்லாமல் நீ இங்கே வரவேண்டாம்" என்று சீதாவை திட்டுவதுடன், அவளை அடித்து விரட்டுகிறார். இதனால் சீதா சோகத்தில் இருக்கிறார்.
இறுதியாக, அந்த ஆபத்தான இடத்துக்குள் செல்ல வேண்டுமானால் சாதாரணமாக முடியாது என்பதை புரிந்த முத்து, புது கெட்டப்பில் உள்ளே செல்ல வேண்டும் என்று திட்டம் போடுகிறார். இதனால் அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, இந்த எபிசோடு முடிவுக்கு வருகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications