சிறகடிக்க ஆசை: விஜயாக்கு அல்வா கொடுத்த ரோகிணி.. அருணிடம் நறுக்குன்னு மீனா கேட்ட கேள்வி! வருத்தத்தில் முத்து
சென்னை: (Siragadikka Aasai Serial Today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2026 பிப்ரவரி 6ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடில் மனோஜை நேருக்கு நேர் மாட்ட வைக்க ரோகிணி போட்ட திட்டம் எதிர்பார்த்ததை விட வேகமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், சீதா - அருண் இடையிலான குடும்ப பிரச்சனையும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளாக வெளிப்பட்டது.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
(Siragadikka Aasai serial Feb 6 2026) அம்மா வீட்டுக்கு அழுதுகொண்டே வந்த சீதாவை பார்த்து, மீனா என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அப்போது, முத்து மீது இருந்த கோபத்தை சீதாவிடம் காட்டி அருண் அவளை அடித்துவிட்டதாக சீதா சொல்லி உடைகிறார். முகத்தில் காயம், கன்னத்தில் வீக்கம் என அவஸ்தையில் இருக்கும் சீதா, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று மீனாவிடம் கெஞ்சுகிறார். குறிப்பாக மாமாவிடமும் அம்மாவிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். சீதாவின் நிலையை பார்த்து வருத்தப்பட்ட மீனா, அவளுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்புகிறார்.
ரோகிணியை பார்த்த மனோஜ்
மறுபுறம், ரோகிணி தினமும் ஒரு ஆணுடன் பார்க்கில் பேசுவதாக சந்தோஷ் மூலம் தகவல் வந்ததால், மனோஜ் நேரில் பார்த்தால்தான் நம்புவேன் என்று பார்க்குக்கு செல்கிறார். சந்தோஷும் கூடவே வருகிறார். இருவரும் மறைந்து நின்று ரோகிணியை கவனிக்க முயற்சிக்க, அங்கு இருந்த வாட்ச்மேன் இவர்களின் நடவடிக்கையை தவறாக புரிந்து கொள்கிறார்.
"பெண்ணை தவறான நோக்கில் பார்க்கிறார்கள்" என நினைத்து, பார்க்கில் இருந்தவர்களுடன் சேர்ந்து மனோஜை சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். திடீரென ஏற்பட்ட இந்த குழப்பத்தில் சந்தோஷ் தப்பித்து ஓடிவிட, மனோஜ் மட்டும் அடிபட்டு மாட்டிக் கொள்கிறார்.
ரோகிணிக்கு கிடைத்த ஆதாரம்
அடிதடி சத்தம் கேட்டு ஓடிவந்த ரோகிணி, ஏன் இவரை அடிக்கிறீங்க என்று கேட்கிறார். அப்போது மனோஜ் பதற்றத்தில், "இவ என் பொண்டாட்டிதான்" என்று சொல்கிறார். இந்த ஒரே வார்த்தை தான் ரோகிணிக்கு பெரிய ஆயுதமாக மாறுகிறது.
மனோஜ் தன்னை "பொண்டாட்டி" என்று சொன்னதை ரோகிணி வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொள்கிறார். டைவர்ஸ் கேஸில் இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக மாற வாய்ப்பு இருப்பதாக சீரியல் நகர்கிறது. ரோகிணியின் மாஸ்டர் பிளான் இங்கே ஒர்க் அவுட் ஆனது போல தெரிகிறது.
அருணுக்கு மீனாவின் அறிவுரை
சீதாவை பார்த்த பிறகு நேராக அருண் வீட்டுக்குச் செல்லும் மீனா, அருனிடம் கடுமையாக பேசுகிறார்.
"எல்லாரையும் மீறி உன்னை நம்பிதான் என் தங்கச்சி உன்னுடன் வந்தாள். அவளை இப்படிச் சித்ரவதை செய்வதா?" என்று கண்டிக்கிறார். ஆனால் மீனாவின் வார்த்தைகள் அருணை பெரிதாக மாற்றவில்லை. அவன் பழைய கோபத்திலேயே இருப்பது போல காட்டப்படுகிறது.
டைவர்ஸ் கேஸ்
இதற்கிடையில், வீட்டில் முத்து, அண்ணாமலை, விஜயா என எல்லோரும் மனோஜின் விவாகரத்து வழக்கு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வக்கீல், உங்க வீட்டில் இல்லாத இன்னொருவர் ரோகிணி பற்றி உண்மைகளை சொல்ல வேண்டும் என்று சொன்னதை வைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்.. மாஸ் காட்டிய விஜய் டிவி! சன் டிவி டிஆர்பி போட்டி
அதற்கு இந்த வழக்கில் ரோகிணியின் தோழி வித்யாவை சாட்சியாக கொண்டு வரலாம் என திட்டமிடுகிறார்கள். கடைசியாக விஜயா மனோஜ்க்கு சீக்கிரமாக டைவர்ஸ் கிடைச்சதும் வேற ஒரு நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல, அண்ணாமலை எதற்கும் அவசரப்படாதே என்று அட்வைஸ் சொல்லிவிட்டு சோகமாக இருக்கிறார். அப்போது முத்து அப்பாவுக்காக நாம தான் இந்த பிரச்சனையில் ஏதாவது முடிவெடுக்கணும் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications