"இனி நான் இந்த வீட்டு மருமகளே இல்லை" ஜனனி எடுத்த முடிவு.. குணசேகரனுக்கு இனி தான் பிரச்சனையே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
சக்தி தன்னுடைய அண்ணனான குணசேகரின் பேச்சைக் கேட்டு ஜனனி இடம் அவருடைய கேரக்டரை தப்பாக பேசியதால் ஜனனி வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார்.
ஏற்கனவே ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என காத்துக்கொண்டிருந்த குணசேகரனுக்கு இப்போது கொண்டாட்டமாக இருந்தாலும் இனி தான் பிரச்சனையே ஏற்படப்போகிறதாம்.

கதை சுருக்கம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டது. அண்ணன் ஆக இருக்கும் குணசேகரன் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு பிரிந்து போய் விடக்கூடாது என்பதற்காக தங்கள் வீட்டிற்கு வந்த மருமகள்களை அடிமை போல நடத்தி வருகிறார்கள். இதில் கடைசி மருமகளாக வந்திருக்கும் ஜனனியால்தான் மீதம் இருக்கும் பெண்களுக்கு வாழ்க்கையில் விடிவு ஏற்பட போகிறது. தற்போது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருப்புமுனை வந்துவிட்டது.

ஜனனியின் எதிர்பார்ப்பு
குணசேகரனின் பேச்சைக் கேட்டு சக்தி ஜனனியிடம் பேசாமல் இருந்து வருகிறார். சக்தி எப்படியும் மனம் திருந்தி விடுவார் என்ற நம்பிக்கையில் ஜனனியும் குணசேகரனும் அவருடைய அம்மாவும் வார்த்தைகளால் எவ்வளவோ வசைபாடினாலும் தாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே சக்தி பல நேரங்களில் அண்ணனுக்கு சிறந்த தம்பியாகவும் சில நேரங்களில் ஜனனிக்கு தகுந்த கணவராகவும் நடந்து கொண்டு வருகிறார். அதனால் சக்தி எப்படியும் மீண்டும் நம்மளை புரிந்து கொண்டு விடுவார் என்று ஜனனி எதிர்பார்த்து இருக்கிறார்.

கௌதமால் வந்த பிரச்சனை
தன்னுடைய அண்ணனான குணசேகரன் ஜெயிலுக்கு செல்வதற்கு காரணம் ஜனனி தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சக்தி தற்போது ஜனனியை அடியோடு வெறுத்து வருகிறார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் கௌதம் வந்து வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியின் அப்பா தீபாவளி சீர் செய்வதற்காக வீட்டிற்கு வந்த நிலையில் குணசேகரனும் அவருடைய அம்மாவும் சேர்ந்து அவரை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தனர். இந்த நிலையில் கௌதம் வந்து இன்று பிரச்சனை செய்திருக்கிறார். இதை ஜனனியிடம் சக்தி கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.

தொடங்கியது எதிர்நீச்சல்
இப்ப எதுக்கு அவன் வந்து குதிச்சுக்கிட்டு இருக்கான். அவனை கொண்டு வந்து இறக்கினது நீ தானே என்று பக்கத்தில் இருக்கும் சோபாவை மிதித்த படி, கௌதம் கௌதம் என்று சக்தி கடும் கோபத்தில் கத்துகிறார். அதுமட்டுமில்லாமல் அது எப்படி அவனை லவ் பண்ணிக்கிட்டு என் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்க என்று கேட்கவும், ஜனனி சக்தியின் சட்டை காலரை பிடித்து இழுத்து, சத்தி....இனி நான் உனக்கு பொண்டாட்டியும் இல்லை, இந்த வீட்டுக்கு மருமகளும் இல்லை என்று கூறி சக்தியை தள்ளிவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார். ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தது இதுதான். தற்போது அது நடந்து விட்டது. இனி தான் ஜனனி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப் போகும் முடிவுகளால் குணசேகரனின் ஆட்டம் அடங்கப்போகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications