பல வருடங்கள் கழித்து கர்ப்பமான சன் டிவி நடிகை... எளிமையாக வளைகாப்பு! குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் அனு தன்னுடைய வளைகாப்பு பங்க்ஷனை எளிமையாக முடித்து இருக்கிறார்.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனு தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குதிந்து வருகிறது.

அனு தற்போது ஐந்தாவது மாத வளைகாப்பு பங்க்ஷனை தன்னுடைய கணவரோடு எளிமையாக கொண்டாடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சீரியல் வில்லி

சீரியல் வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அனு விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி என பல முக்கிய சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் அனு நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு பார்த்து பலரும் வெறுப்படைந்து வந்தாலும் இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.

நிஜத்தில் வேறு மாதிரி

நிஜத்தில் வேறு மாதிரி

ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் இவருடைய மிரட்டலான வில்லத்தனம் பலரையும் வெறுப்படையவும், மிரண்டு போகவும் செய்திருந்தது. இவருடைய சீரியலை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறாராம். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துறுதுப்பான கேரக்டரையும், ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அனு நிஜ வாழ்க்கையிலும் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஜாலியாக எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். இதனால் சீரியலை தாண்டியும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

மகிழ்ச்சி வளரட்டும்

மகிழ்ச்சி வளரட்டும்

நடிகை அனு தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சீரியலில் கர்ப்பமாக இருக்கிறார். அதே நேரத்தில் நிஜ வாழ்க்கையிலும் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். ஆரம்பம் முதலே இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் தற்போது இவர் ஐந்தாவது மாத வளைகாப்பு பங்க்ஷனை எளிமையாக கொண்டாடி முடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த சந்தோஷத்தை பூரித்த முகமாக இவர் கொண்டாடுவதை பார்த்து தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று கமெண்ட்ஸ்களில் வாழ்த்துக்கள் குவிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+