சன் டிவி சீரியல் நடிகைகளை கொத்தாக அள்ளும் கலைஞர் டிவி... சபாஷ் சரியான போட்டி
பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்கப்போகிறார்.
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பான சீரியல்களை மட்டுமல்லாது நடிகைகளையும் தங்களின் சேனல் பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளது கலைஞர் டிவி. லேட்டஸ்டாக வானத்தை போல சீரியலில் நாயகியாக நடித்த ஸ்வேதா கலைஞர் டிவிக்கு தாவியுள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'வானத்தை போல'. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் தமனும், தங்கை துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதாவும் நடித்து வந்தனர்.

விலகிய ஸ்வேதா
இந்த சீரியல் ஒளிப்பரப்பான சில எபிசோடுகளிலேயே துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா விலகிவிட்டார். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சீரியலை விட்டு விலகியதாக கூறப்பட்டது. சீரியலை விட்டு விலகினாலும் இன்ஸ்டா பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவ் ஆக இருக்கிறார்.

கன்னட சீரியலில் ஸ்வேதா
தினசரியும் விதவிதமாக ரீல்ஸ்களைப் போடுவார் ஸ்வேதா. அதே நேரத்தில் தமிழ் சீரியல்களை தவிர, தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் ஸ்வேதா நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமாவில் நடிக்கப்போவதாக கூறி தமிழ் டிவி சீரியலை விட்டு போன ஸ்வேதா மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்துள்ளார்.

கலைஞர் டிவியில் ஸ்வேதா
விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள 'கண்ணதிரே தோன்றினாள்' சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடிக்கிறார். இவருடன் இணைந்து மாளவிகா அவினாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்வேதா மீண்டும் சீரியலுக்கு வந்தது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவின் பாசம்
தான் நடிக்கப்போகும் சீரியலின் புரமோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதைதான் கண்ணெதிரே தோன்றினாள். சினிமா பட தலைப்புகளை சீரியலுக்கு வைப்பது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது மற்றொரு திரைப்பட தலைப்பு கண்ணெதிரே தோன்றினாள்... கலைஞர் டிவி சீரியலுக்கு தலைப்பாகி உள்ளது.

கொத்தாக அள்ளும் கலைஞர் டிவி
சன்டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இப்போது கலைஞர் டிவி முதல் கலர்ஸ் தமிழ் டிவி வரை ஒளிபரப்பாகிறது. சன்டிவி சீரியல்களில் நடித்து வந்த ராதிகா இப்போது கலைஞர் டிவியில் புதிய சீரியலில் நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இப்போது சன்டிவியில் நடித்த ஸ்வேதாவும் கலைஞர் டிவிக்கு தாவியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications