Super Singer 11 winner: சூப்பர் சிங்கர் சீசன் 11 வின்னர் இவங்கதானா? திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்!
சென்னை: விஜய் டிவி என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு முதலில் வருவது அதன் ரியாலிட்டி ஷோக்கள்தான். அதில் பல ஆண்டுகளாக பாடும் திறமை கொண்ட இளம் கலைஞர்களை தேடி, அவர்களை பிரபலப்படுத்தி, இசை உலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் நிகழ்ச்சி தான் 'சூப்பர் சிங்கர்'. மேடையில் பாடுவதோடு மட்டுமல்லாமல், பலரின் வாழ்க்கைப் பயணத்தையும் மாற்றிய ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கிய 'சூப்பர் சிங்கர் சீசன் 11 (சீனியர்)' பல வாரங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்திய போட்டிகளுக்குப் பிறகு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற உள்ள கிராண்ட் பினாலே நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரொமோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

24 பேரில் இருந்து 7 பேர்
இந்த சீசனில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பல கட்டங்களான கடும் போட்டிகளுக்குப் பிறகு இறுதி மேடைக்கு 7 பேர் தேர்வாகியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் 11 பைனலிஸ்ட்கள்
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண், தர்ஷனா மற்றும் ஆப்ரகாம் என ஏழு பேரும் தங்களது தனித்துவமான குரல், பாடல் தேர்வு மற்றும் மேடை பெர்பார்மன்ஸ் மூலம் நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்துள்ளனர். குறிப்பாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து போட்டியில் பங்கேற்ற திஷாதனா, தனது வாழ்க்கைப் பயணமும் குரல் திறமையும் காரணமாக ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றுள்ளார். "இலங்கை குயில்" என்ற பெயருடன் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பரிசுகள்
சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி பெறுவது என்பது ஒரு கோப்பை மட்டும் அல்ல. இதுவரை நடந்த சீசன்களில், வெற்றியாளருக்கு கடந்த சீசனை போலவே 60 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரன்னர்-அப் போட்டியாளர்களுக்கும் பரிசுத் தொகை, டிராபி, பாடல் வாய்ப்புகள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, பெரிய இசையமைப்பாளர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு போன்ற பல அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சினிமாவுக்கு பாடகர்களை வழங்கிய மேடை
'சூப்பர் சிங்கர்' என்பது வெறும் டிவி ஷோ அல்ல; தமிழ் சினிமாவுக்கு பல திறமைமிக்க பின்னணி பாடகர்களை அறிமுகப்படுத்திய ஒரு பயிற்சி மேடை. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பலர் இன்று திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக நிலைபெற்று, முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வருகின்றனர்.
முந்தைய சீசன்களில் பிரபலமான பல பாடகர்கள், இன்று தமிழ் சினிமாவின் முக்கிய குரல்களாக மாறி, முன்னணி நடிகர்களின் பாடல்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல், பெரிய இசை நிகழ்ச்சிகள், தேசிய, சர்வதேச மேடைகளிலும் பாடி வருகின்றனர். இதனால் தான், சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, பங்கேற்பதே பலருக்கான வாழ்க்கை மாற்றும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இறுதி மேடைக்கான ப்ரொமோ காட்சிகள் வெளியாகி, போட்டியாளர்களின் பயணம், அவர்கள் கடந்த வந்த கடினமான பாதை, குடும்ப பின்னணி, கனவுகள் ஆகியவை உணர்ச்சிப்பூர்வமாக காட்டப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களிடையே யார் வெல்லப்போகிறார் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஒருபுறம் நிகிலுக்கு ஆதரவு அதிகரித்து வர, மற்றொரு புறம் திஷாதனா, மீனாட்சி, தவசிலி போன்றவருக்கும் அதிகமான சப்போர்ட் இருக்கிறது.
யார் கோப்பையை கைப்பற்றப்போகிறார்? யாருக்கு வாழ்க்கையை மாற்றும் அந்த ஒரே தருணம் கிடைக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் இந்த இறுதி மேடையை ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications