இனி நமக்கு நாமே ஆறுதல்.. நெகிழ்ச்சியாக பேசிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..இது யோசிக்க வேண்டியது தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பின்னணி பாடகியானா ராஜலட்சுமி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ பலரையும் யோசிக்க வைக்கும் விதமாக இருந்து வருகிறது.

ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் ராஜலட்சுமி பேசியிருப்பது பலருக்கும் பயனுள்ள வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

எப்போதும் யாரிடமும் ஆறுதல் எதிர்பார்க்கக் கூடாது என்று பேசிய ராஜலட்சுமிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பாடகியாக அறிமுகம்

பாடகியாக அறிமுகம்

மக்கள் இசை பாடகியாக இருந்த ராஜலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய பாடல் திறமையை ரசிகர்களுக்கு நிரூபித்து இருந்தார . இவருடைய பாடலை கேட்ட ரசிகர்கள் பலர் மெய்மறந்து போயிருக்கின்றனர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய கணவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்து விட்டார்கள். இந்த பாடகர்கள் ஜோடி பல திரைப்படங்களில் பாடல்களை பாடி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

கருத்தான வீடியோ

கருத்தான வீடியோ

ராஜலட்சுமி பாடகி மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பேச்சாளராகவும் இருந்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து வரும் ராஜலட்சுமி தற்போது சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய வீட்டின் கிரகப்பிரவேசம் முடித்து இருந்தார். அதற்கு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கி இருந்தனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு யாரும் ஆறுதல் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு நாமே ஆறுதல் என்று கருத்தோடு இவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஆறுதலுக்கு விளக்கம்

ஆறுதலுக்கு விளக்கம்

ராஜலட்சுமி வெளியிட்ட வீடியோவில் சின்னதா ஒரு நெகட்டிவ் விஷயம் நடந்து விட்டால் கூட யாராவது நமக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோணும். அச்சச்சோ.!! கீழே விழுந்துட்டியா? அப்படியா உன்ன ஏமாத்திட்டாங்க? அவ உன்ன விட்டுட்டு போயிட்டாளா??.. இப்படி யாராவது நம்மள பார்த்து அனுதாப படனும் நமக்கு தோணும். ஆக்சுவலா அது ஒரு எதார்த்தம் தான். நமக்கு ஒரு இழப்பு வரும் போது பக்கத்தில் இருந்து யாராவது ஆறுதலாக அனுதாபமோ படும்போது நமக்கு கொஞ்சம் ஆறுதலாக தான் இருக்கும். இருந்தாலும், அது எப்போதும் ஒரு பழக்கமா ஆக்கிக்கவே கூடாது ஏனென்றால் இது ஒரு ஆறுதல் சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் என்றும், அவங்க ஆறுதல் சொன்னால் தான் அது சரி பண்ண முடியும் என்றும், நம்ம நெனச்சிட்டோம் என்றால் நம்மலால் அந்த விஷயத்தில் இருந்து கடந்து வரவே முடியாது. அப்படி இல்லன்னா ஒருத்தங்க ஆறுதல் சொன்னாதான் ஒரு விஷயத்தில் இருந்து மீண்டு வருவேன் என்று நினைத்தால், சில நேரங்களில் நாம் விழும் போது யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி யாருமே இல்லாத போது நம்மளால் எந்திரிச்சு வரவே முடியாது.

என்ன ஒரு தத்துவம்

என்ன ஒரு தத்துவம்

அதனால வண்டியில் இருந்து விழுந்தாலும் சரி, வாழ்க்கையில் இருந்து விழுந்தாலும் சரி விழுந்து எந்திரிக்கும் போதே நாம நமக்குள்ள சொல்லிக்க வேண்டியது.,, என்ன ஆச்சு வலிக்குதா. !!?? ஒன்னும் இல்ல திரும்பிப் பாரு, இதைவிட பெரிய பெரிய அடி எல்லாம் தாங்கிக்கிட்டு நீ எந்திரிச்சு வந்துருக்க இது ரொம்ப சாதாரணம். இத கண்டிப்பா உன்னால முடியும். எந்திரிச்சு வா என்று சொல்லுங்க, நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது நம்மலே நமக்கு ஆறுதல் சொல்லும் திறமை இருந்துச்சுன்னா.. நம்மை தோற்க தோற்கடிக்க யாராலயும் முடியாது என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் உண்மைதான் சரியான நேரத்தில் இந்த பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள் என்று இவருக்கு லைக்குகளை அளித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+