Karuppu Box Office: 11 நாளில் மாஸ் வேட்டை.. சூர்யாவின் கருப்பு செய்த வசூல் சம்பவம்.. மெகா ரிட்டர்ன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த அந்த தருணம் இப்போது நிஜமாகி இருக்கிறது. ஒரு வெற்றிப்படம் மட்டும் அல்ல, பாக்ஸ் ஆபிஸை குலுக்கிய கம்பேக் ஹிட்டாக கருப்பு மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும், தியேட்டர் வசூலில் எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை என்ற பேச்சு இருந்தது. அந்த விமர்சனங்களுக்கு ஒரே அடியாக பதில் கொடுத்திருக்கிறது கருப்பு.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

கருப்பு படத்தின் வெற்றி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. காரணம், இது சாதாரண வெற்றி அல்ல; நீண்டநாள் காத்திருப்புக்கு கிடைத்த மிகப்பெரிய திரையரங்க வெற்றி. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யாவுக்கு "மாஸ் தியேட்டரிக்கல் பிளாக்பஸ்டர்" இல்லை என்ற விமர்சனத்தை இந்த படம் உடைத்தெறிந்துள்ளது.

கருப்பு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. டீசர், டிரெய்லர், பாடல்கள் என படத்தின் புரமோஷன் வேகமாக சென்ற நிலையில், வெளியீட்டு தேதியிலும் சிறிய குழப்பம் ஏற்பட்டது. முதலில் மே 14 வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் படம் மே 15ஆம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் அந்த ஒரு நாள் தாமதம் கூட படத்தின் வேகத்தை குறைக்கவில்லை.

கருப்பு படத்தின் பின்னணி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் பெரிய தமிழ் படம் என்பதாலும் கூட படம் பேசப்பட்டது.

ஆனால் கருப்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்ப ஆடியன்ஸின் ஆதரவு. குறிப்பாக பெண்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டை தாண்டி கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் படம் நல்ல ஓட்டத்தை பெற்றுள்ளது.

இதன் விளைவாக பாக்ஸ் ஆபிஸில் கருப்பு தினமும் நிலையான வசூலை குவித்து வருகிறது. வார இறுதி முடிந்த பிறகும் படம் வசூலில் சரிவு இல்லாமல் ஓடுவது, இது வெறும் ரசிகர் ஓப்பனிங் அல்ல, மக்கள் ஏற்றுக் கொண்ட ஹிட் என்பதை காட்டுகிறது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

கருப்பு 11வது நாள் வசூல் நிலவரம்

11வது நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட ரூ.6 கோடி வரை சென்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் கூறுகின்றன. மொத்த உலகளாவிய வசூல் ரூ.260 கோடி முதல் ரூ.275 கோடி வரையிலும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே ரூ.130 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, இந்த வெற்றியின் அளவை காட்டுகிறது. வார நாட்களிலும் நல்ல occupancy இருப்பதால், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனம் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு இந்த வெற்றி ஏன் முக்கியம் என்றால், கடந்த சில ஆண்டுகளாக நேரடி OTT ரிலீஸ், கலவையான விமர்சனங்கள், பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்புகள் என பல சவால்கள் இருந்தன. ஆனால் ரசிகர்கள் மட்டும் தொடர்ந்து அவருக்கு துணையாக இருந்தனர். அந்த நம்பிக்கைக்கு கிடைத்த பதில்தான் கருப்பு என்று சொல்லலாம்.

இப்போது ரசிகர்களின் கேள்வி ஒன்றே - கருப்பு 300 கோடி கிளப்பை எட்டுமா? தற்போதைய வேகத்தை பார்த்தால் அது சாத்தியமே என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணிக்கின்றன. சூர்யாவுக்கு இது வெறும் ஹிட் இல்லை... செம்ம கம்பேக் ஸ்டேட்மென்ட்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+