பாதம் பதிந்த முட்களின் வலி நீ மட்டுமே உணர்வாய்...விஜிக்கு அறிவுரை சொன்ன கனி
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தனது சகோதரிக்கு கனி அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
விஜி வெற்றி பெற்றதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கொந்தளிக்கும் நெட்டிசன்களுக்கு கனியின் வார்த்தைகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கனியின் அறிவுரைக்கு விஜியின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கனியின் வாழ்த்து மழை
சினிமா துறையில் பல கலை குடும்ப வாரிசுகள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் காதல் கோட்டை புகழ் அகத்தியனின் வாரிசுகளான கனி மற்றும் விஜயலட்சுமி சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர். அதிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை கைப்பற்றிய கனி தற்போது தனது சகோதரிக்கு வாழ்த்துக்கள்களை வாரி வழங்கியுள்ளார். ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே இவர்கள் ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்று துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

பிக்பாஸில் கிடைக்காத வெற்றி
ஏற்கனவே விஜயலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்த அளவு அங்கு அவருடைய திறமையை காட்ட முடியவில்லை. அதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே இவர் வெளியேற்றப்பட்டார். ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் தன் வெற்றியை விட்டு விடுவதில்லை என்று முடிவோடு மீண்டும் முயற்சி செய்து சூப்பர் மாம் எனும் பட்டத்தை தட்டி விட்டார் இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் சாதித்து தனது திறமையை நிலைநிறுத்த வேண்டும் என்று இவர் துடித்துக் கொண்டிருந்தார்.

திறமைக்கு அங்கீகாரம்
விஜயலட்சுமியின் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் அறிமுகமானது. இதுவரைக்கும் இல்லாதவகையில் இந்த ரியாலிட்டி ஷோ பெரிய அளவில் இருப்பதாகவும், பிரம்மாண்டமாக இருப்பதாலும் அதில் கலந்து கொள்ள முடிவெடுத்து உள்ளார். சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களம் இறங்கும் போது இவருடைய ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். பலர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்ட இடத்தை எப்படியும் சர்வைவர் நிகழ்ச்சியில் பிடித்து விட வேண்டும் என்று கூறி வந்தனர்.

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி
ஆரம்பத்தில் விஜயலட்சுமிக்கு காடர்கள் அணியில் இடம் கிடைத்ததும் அவருடைய சமையல் திறமையை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்டுகள் வர ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களால் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் தாண்டி கடைசியில் வெற்றி கோப்பையை மட்டுமல்லாமல் ஒரு கோடி பரிசுத் தொகையையும் விஜயலட்சுமி பெற்றுவிட்டார். இதைப்பார்த்து பல நெகட்டிவர்ஸ் இவருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

அன்பு வாழ்த்துக்கள்
அதற்கு பதில் சொல்லும் விதமாகவும் தனது சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறும் வகையிலும் கனி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். அதில் விஜி கண்ணா...உன் பாதம் பதிந்த முட்களின் வலி நீ மட்டுமே உணர்வாய்...தகுதியற்றவர்களிடம் வெற்றி தஞ்சம் அடைவதே இல்லை!!ஒரு தாயாக, தமக்கையாக பெண்ணாக உன் வெற்றியில் பெருமிதம் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உனக்கு எப்போதும் மகிழ்ச்சியை அருளட்டும்.. வாழ்த்துக்கள் கண்ணா!!என்று கூறியுள்ளார் பல ரசிகர்கள் லைக்குகளை அளித்துள்ளனர்.
-
ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை.. நெட்டிசனின் கமெண்ட்டுக்கு, அதிரடியான பதிலடி! -
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications