For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தள்ளுவண்டியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டிய காலம் உண்டு!

Google Oneindia Tamil News

சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு சுய தொழில் செய்பவர்கள், மாத வருமானத்துக்கு வேலை பார்ப்பவர்கள் இருவருக்குமான விவாத நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் இரு தரப்பினரும் கணிசமான அளவில் பங்கேற்று தங்களது பங்கு விவாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

அதில் ஒரு இளைஞர் தன் 12 வயதிலேயே சேட்டு கடைக்கு வேலை பார்க்க சென்றதாகவும், அப்போதைய ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்றும் கூறியதோடு, அந்த கம்பெனியில் மாடுகளுக்கு பதிலாக தன்னை பூட்டிய காலம் உண்டு என்றும் கூறினார்.

 படிப்படியான வளர்ச்சி

படிப்படியான வளர்ச்சி

மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தால் பொருளாதாரத்தில் அசுரத்தனமான வளர்ச்சியை காண முடியாது என்று ஒரு பெண் கூறினார். ஏன் அங்கும் வருடாவருடம் இன்கிரிமென்ட் போடுவார்கள் என்று கரு. பழனியப்பன் அந்த பெண்ணிடம் கேட்டார். அப்போது அந்த பெண்மணி எவ்ளோ சார் போட்டுட போறாங்க என்று சொல்ல, இருங்க கேட்டு பார்த்துருவோம் என்று மாதச் சம்பளம் வாங்குவோர் பக்கம் இது குறித்து கேட்டார்.

திருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க!திருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க!

 இன்கிரிமென்ட் சதவிகிதம்

இன்கிரிமென்ட் சதவிகிதம்

எத்தனை சதவிகிதம் இன்கிரிமென்ட் வாங்குவீர்கள் என்று கேட்டபோது, ஒரு பெண் 100 சதவிகிதம் என்று கூறினார். அப்படியானால், உங்கள் சம்பளம் பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தேன். முதல் வருடம் 100 சதவிகிதம் இன்கிரிமென்ட் என்கிற அடிப்படையில் 30 ஆயிரம் ஆச்சு என்கிறார். அடுத்தடுத்து இப்படி 100 சதவிகிதம் இன்கிரிமென்ட் வாங்கினீர்களா என்று கேட்டபோது இல்லை என்று சொன்னார். அப்படியானால், அதை இன்கிரிமென்ட் என்று சொல்ல கூடாது என்று கூறினார் கரு. பழனியப்பன்.

 ஏம்ப்பா பிரவுன் சட்டை

ஏம்ப்பா பிரவுன் சட்டை

அதில் ஒருவர் சொன்னார் இந்த பிரவுன் சட்டைக்காரர் சொன்னதில் எனக்கு மாற்று கருத்து இருக்கு சார். நாங்கதான் இவங்களுக்கு சம்பளம் தர்றோம்னு எவ்ளோ கர்வத்தோடு அவர் சொன்னாரோ, அதே கர்வத்தோடு நான் சொல்றேன்.. என்னால என் கம்பெனிக்கு பிராஃ பிட் இருக்குன்னு சொன்னார். அதற்கு ஆப்போசிட் சைடில் இருந்த அந்த பிரவுன் சட்டைக்காரர், எனக்கு கர்வம் இல்லை சார்.. நானும் ஒரு காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்தேன் என்று கூறினார்.

 25 வருடமாக

25 வருடமாக

பிரவுன் சட்டை மேலும் தொடர்ந்தார்.. நான் 25 வருடமாக நான் தொழில் செய்துகிட்டு இருக்கேன்..அதுக்கு முன்னால நான் என் ஓனர்கிட்டே வேலை செய்துக்கிட்டுத்தான் இருந்தேன்..அதனாலதான் இப்போ நான் தொழில் செய்ய முடியுது.. அதனால எனக்கு கர்வம் கிடையாது. 12 வயசில் வேலைக்கு போனேன். அப்போது என் ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய் 50 காசு என்கிறார். அப்போதுதான் சொந்த கம்பெனியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டி வேலை வாங்கிய காலம் எல்லாம் உண்டு என்று கூறினார். +2 படிக்கும்போது தள்ளு வண்டியில் சூப் கடை போட்டு இருந்தேன் என்றும் சொன்னார்.

 தள்ளுவண்டியில் இட்லி

தள்ளுவண்டியில் இட்லி

ஒயின் ஷாப்புக்கு பக்கத்தில் மாலை நேரத்தில் இட்லி, சால்னா, சூப் கடை வச்சு இருந்தேன். அப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். டே காலேஜ் சீட் கிடைச்சும் ஈவ்னிங் காலேஜ்ல சேர்ந்து படிச்சேன். அப்போ லுங்கிதான் கட்டி இருப்பேன். பைசாவை வாங்கி லுங்கியிலதான் போடுவேன்னு சொன்னார். அப்போது ஒரு கம்பெனி மேனேஜர் வந்து எங்க வொர்க்கர்ஸுக்கு தினமும் காபி டீ தர முடியுமான்னு கேட்டார்.82 பேருக்கு டீ காபி தரணும் சார்..அந்த கம்பெனிக்கு 25 வருஷமா இன்னும் நான்தான் டீ காபி கொடுத்துக்கிட்டு இருக்கேன் என்று சொன்னார்.

 இன்றைக்கு சூப்பர் மார்க்கெட்

இன்றைக்கு சூப்பர் மார்க்கெட்

இன்றைக்கு ரெண்டு சூப்பர் மார்க்கெட் வச்சு இருக்கேன், ஒரு வெஜ் ஹோட்டல், ஒரு நான் வெஜ் ஹோட்டல், கார்ப்பரேட் கம்பெனிக்கு கேட்டரிங், திருமணத்துக்கு கேட்டரிங் என்று செய்து வருகிறேன் என்று சொல்லும் இந்த இளைஞரின் வயது இப்போது 45 என்று சொன்னார்.இவர் பேசி முடிக்கையில் இவருக்கு கைத்தட்டல் பார்க்கணுமே..அடடா! ஞாயிறு ஜீ தமிழ் டிவி பாருங்க!

English summary
On Sunday, Zee Tamil TV's TamilTamil Tamil Show hosted a discussion for both self-employed and monthly earners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X