The Raja Saab OTT: ஓடிடிக்கு வந்த "தி ராஜா சாப்".. கதை இதுதான்! பிரபாஸுக்கு இந்த நிலைமையா?
சென்னை: மாருதி தசரி இயக்கத்தில், பிரபாஸ் முதன்முறையாக ஹாரர்-காமெடி ஜானரில் நடித்த 'தி ராஜா சாப்' படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது. பான்-இந்தியா படம்னு சொல்லி, பெரிய பில்டப், பெரிய பட்ஜெட், பெரிய நட்சத்திர பட்டாளம் என எல்லாமே 'பெரிசு'. பிரபாஸுடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், ரித்தி குமார், நிதி அகர்வால், ஜரீனா வஹாப் என காஸ்டிங் பார்த்தாலே "ஏதோ ஒரு விஷயம் இருக்குமே"னு நம்ப வைக்கும் லைன்-அப்.
ஆனால் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள், "இது பேய் படமா, காமெடி படமா, இல்ல பேய் மாதிரி காமெடி படமா?"னு தலையைச் சுரண்டிக்கிட்டே வெளியே வந்தாங்க. பெரிய எதிர்பார்ப்போடு வந்த 'தி ராஜா சாப்', பாக்ஸ் ஆபிஸில் ராஜாவா இல்லாம, ரொம்ப சீக்கிரமே 'சாப்' வாங்கி சைலண்ட் மோட்ல போயிடுச்சு.

தி ராஜா சாப் கதை
'தி ராஜா சாப்' கதைன்னு பார்த்தா, வழக்கமான பேய் பங்களா + சாபம் + கடந்த கால ரகசியம் + அதை உடைக்க வர்ற ஹீரோ என்ற ஃபார்முலா தான். பிரபாஸ் ஒரு பக்கம் பயப்படுற மாதிரி முகம் வைக்கிறார், இன்னொரு பக்கம் காமெடி பண்ண முயற்சி செய்கிறார். பேய் வந்தா பயமுறுத்தணும், காமெடி வந்தா சிரிக்க வைக்கணும். ஆனா இங்க இரண்டுமே நடுவுல மாட்டிக்கிட்டு, "என்னடா இது?"னு நம்மளையே பயமுறுத்தும் லெவல்ல இருக்கு.
சஞ்சய் தத் இருக்கார், ஆனா அவர் வந்ததால படம் வெயிட்டா இருக்கு னு சொல்ல முடியல. மாளவிகா மோகனன், ரித்தி குமார், நிதி அகர்வால் எல்லாரும் இருக்காங்க... ஆனா இருக்கிற மாதிரி தான் இருக்காங்க. கதைக்கு பெரிய டிரைவ் எதுவும் இல்லை. பேய் சீன் வந்தா சிரிப்பு வருது; காமெடி சீன் வந்தா கொஞ்சம் பயமா இருக்கு - இதுதான் இந்த படத்தின் யூனிக் டோன்.
பாக்ஸ் ஆபிஸ்
பட்ஜெட் ரூ.400 கோடி. வசூல் இந்தியாவில் ரூ.143 கோடி, உலகளவில் ரூ.205 கோடி. கணக்குப் போட்டா, இது 'ஹிட்' இல்லை... 'சாபம்' தான். பிரபாஸின் கேரியரில் ஏற்கனவே 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்' மாதிரி பெரிய தோல்விகள் இருந்த நிலையில், அந்த லிஸ்ட்ல 'தி ராஜா சாப்'யும் லேட்டஸ்டா ஜாயின் பண்ணிட்டது.
15 நாட்களுக்குள்ளேயே பல தியேட்டர்களில் இருந்து படம் தூக்கப்பட்டதுன்னு சொன்னா, தியேட்டர்ல பேய் மட்டும் இல்ல, வசூலும் பயந்துட்டு ஓடிப்போச்சு என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்
ஓடிடி ரிலீஸ்
தியேட்டரில் ஓடாத 'தி ராஜா சாப்', இப்போ ஓடிடியில் ஓடப் போகுது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கியிருக்காங்க. அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி, பிப்ரவரி 6 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆரம்பமாகுது. தியேட்டரில் 28 நாட்கள் தாங்க முடியாத படம், வீட்டுல ரிமோட்டோட முன்னாடி எத்தனை நிமிஷம் தாங்குதுன்னு தான் இப்போ பெரிய கேள்வி.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications