திருமணம் சீரியல் ஜோடிகளின் களைகட்டிய மெஹந்தி பங்க்ஷன்.. திருமணம் எப்போது தெரியுமா??
சென்னை: சின்னதிரை நடிகர்களில் திடீர் கல்யாணத்தை தற்போது திருமணம் சீரியல் ஜோடிகளும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
திருமணம் எப்போது என்று கேட்ட ரசிகர்களுக்கு இப்படியா அதிர்ச்சி கொடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நவம்பர் 20 சர்ப்ரைஸ் இருக்கிறது என்று தன்னுடைய ரசிகர்களுக்கு கூறிய ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

ரசிகர்களை கவர்ந்த திருமணம் ஜோடி
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான திருமணம் சீரியல் ஜோடி யாராலும் மறக்க முடியாது. இந்த சீரியலில் மூலமாக காதலில் விழுந்த இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முதல் சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என்பதை இவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இவர்களுக்கான இடம் பெரிய அளவில் இருந்து வருகிறது.

ரசிகர்களின் விருப்பமும் அதுதான்
சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதியது அல்ல. அந்தவகையில் இவர்களுடைய க்யூட்டான நடிப்பையும் ஜோடி பொருத்தத்தையும் பார்த்த ரசிகர்கள் பலர் இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தங்களுடைய ஆசைகளை அடிக்கடி கூறி வந்தனர். ரசிகர்களின் கருத்துக்களால் இவர்களின் மனதிலும் மெல்ல மெல்ல காதல் எட்டிப்பார்க்க தொடங்கிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களிலும் ஒற்றுமையாக இருந்ததை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

தனித்தனி சீரியல்களில் பிஸி
ஆரம்பத்தில் தமிழ் தெரியாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு சித்து தான் தமிழ் பேச கற்றுக் கொடுத்திருக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து மீண்டும் இவர்கள் ஒன்றாக சீரியலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரேயா திருமணம் சீரியலுக்கு பிறகு அன்புடன் குஷி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

களைகட்டிய திருமண பங்க்ஷன்
தற்போது சின்னத்திரை நடிகைகள் பலர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீர் திருமணத்தை நடத்திக் கொண்டிருப்பது போல, இவர்களும் தற்போது திருமணத்தை நடத்த முடிவு எடுத்து விட்டார்கள். இன்று இவர்களின் திருமணத்திற்கான மெஹந்தி பங்க்ஷன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை அன்று இவர்களுடைய திருமணம் நடைபெற இருப்பதாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் சில ரசிகர்கள் திருமணத்தை பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லையே என்று செல்லமாக கோபப்பட்டும் வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications