என்னுடைய கனவு இதுதான்... நிறைவேறிய மகிழ்ச்சியில் கன்னிகா வெளியிட்ட பதிவு..குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பட்டுப் புடவையில் அருகில் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கன்னிகா அதற்குக் கொடுத்த கேப்ஷன் ரசிகர்களால் அதிகமாக லைக் கொடுக்கப்பட்டு வருகிறது.
கனவுகள் எல்லாமே உடனே நிறைவேறி விடாது அப்படி நிறைவேறிய ஒரு கனவினை குறித்து கன்னிகா வெளியிட்ட பதிவு பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த ஜோடி
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி அங்கே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது காலங்காலமாக நடந்து கொண்டு வந்தாலும், பல திருமணங்கள் வாழ்க்கையில் துவக்கத்திலேயே காணாமல் போய்விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியில் முறித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய காதலை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கும் அவர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக கன்னிகா சினேகன் ஜோடி இருந்து வருகின்றனர்.

வயது வித்தியாசம்
கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய துறையில் தாங்கள் சாதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியுலகத்திற்கு காட்டிக்கொள்ளாமல் மறைத்து வந்தனர். பல வருட காத்திருப்புக்கு பிறகு தான் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி பல கேள்விகள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. அதில் பலரும் கேட்கும் கேள்வி சினேகன் மற்றும் கன்னிகா இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அதை தான் பலரும் கேட்டு வருகின்றனர்.

கன்னிகா எடுத்த புது முயற்சி
திருமணத்திற்கு பிறகு கன்னிகா மற்றும் சினேகன் இருவருமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர் .சினேகன் திருமணத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இந்த அளவிற்கு ஆக்டிவாக இருந்தது இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு கன்னிகா சினேகன் பாடிய பல பாடல்களை இவர் ரீ கிரியேட் செய்து இவருடைய பாடல்கள் என்பதை அங்கீகாரப்படுத்தி வருகிறார் .ரசிகர்கள் பலருக்கும் சினேகன் பாடிய பல பாடல்கள் இவர் பாடியது என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் கன்னிகா எடுத்து இருக்கும் புது முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இதுதான் நீண்ட நாள் கனவாம்
சமூக வலைத்தளத்தில் எப்போது புகைப்படங்களையும், வீடியோக்களை வெளியிட்டு வரும் கன்னிகா தற்போது தன்னுடைய ட்ரீம் போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் .அதுவும் தன்னுடைய கணவரோடு முதல் முறையாக எடுத்த போட்டோ சூட் புகைப்படங்கள் தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கன்னிகா வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இவர்களுடைய திருமண புகைப்படங்களை பார்க்கும் போது இப்போதுதான் திருமணம் முடிந்தது போல இருக்கிறது என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் அந்த சிவப்பு புடவை உங்களுக்கே நெய்தது போல இருக்கிறது என்று தங்களுடைய மொத்த அன்புகளையும் கமெண்ட்களில் கொட்டி வருகிறார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications