தூக்க கலக்கத்தில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்..கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அட இது வேறயா??
சென்னை: ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த வலிமை திரைப்படம் இன்று வெளியான நிலையில் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அஜித் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் வித்தியாசமாக செய்ய போகிறோம் என்று ரசிகர்கள் செய்த செயலை வைத்து தான் தற்போது மீம்ஸ்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

வெளியானது வலிமை
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இன்று மாஸாக வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பல நாட்களாக தவம் கிடந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பலனாக இன்று பிரம்மாண்டமாக வலிமை திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அஜித்குமார் தன்னை இனி யாரும் தல என்று அழைக்கக்கூடாது என்று சொன்னாலும் பிறகும்கூட செல்லமாக தல என்று அழைத்து அவருக்காக இன்று காலை வெளியான திரைப்படத்திற்கு நேற்று இரவே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

ரசிகர்களின் வெறித்தனமான செயல்கள்
அஜித்குமாரின் தீவிர ரசிகர்கள் பலர் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் ஆட்டம் பாட்டம் என வேற லெவல் கொண்டாடி வந்துள்ளனர். ஒவ்வொரு தியேட்டர்களிலும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும் போது பல இடங்களில் சொதப்பல்களும் நடந்து கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படத்தைப் பற்றி அஜித் குமாரின் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இன்னும் பல ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையே என்று ஏங்கி போய் இருக்கின்றனர். திரைப்படத்தை பார்த்து விட்ட ரசிகர்கள் பலர் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியில் பூரிப்போடு தியேட்டரை விட்டு வெளியே வந்த வண்ணமாக இருந்து வருகிறார்கள்.

இப்படி ஒரு சொதப்பலா
பொதுவாக பிரபலங்கள் நடித்த திரைப்படங்கள் என்றாலே அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் அதிக அளவில் அஜித்குமார் தன்னுடைய உழைப்பை கொட்டி இருக்கும் இந்த வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பல வருடங்களாக ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட இதே கேள்விகள் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டது சுவாரசியமாக இருந்தது. அந்த அளவிற்கு அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகர்கள் திரைப்படத்தில் அப்டேட்களை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகும் நிலையில் அவர்கள் சும்மா இருப்பார்களா?? பல ரசிகர்கள் இரவு முழுக்க கொட்டும் பனியில் நடுரோட்டில் பட ரிலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் சிலர் அஜித் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக ரோட்டில் சென்ற வண்டியில் இருந்த பால் பாக்கெட்டுகளை எடுக்கிறோம் என்று தயிர் பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளனர்.

மீம்ஸ்களில் கலாய்க்கும் ரசிகர்கள்
அஜித்துக்கு மட்டுமல்லாமல் அஜித் திரைப்படத்தை தயாரித்த போனிகபூருக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். போனிகபூர் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்திருந்த நேரத்தில் அவருடைய காருக்கும் ரசிகர்கள் பலர் பால் அபிஷேகம் செய்கிறோம் என்று தயிர் அபிஷேகம் செய்து இருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் பலர் பால் என நினைத்து ஆவின் தயிர் பாக்கெட்டுகளை அஜித் கட்டவுட் களிலும் போனிகபூர் கார் மீது ஊற்றி இருக்கின்றனர். காலை வேளையில் தூக்கக்கலக்கத்தில் பால் பாக்கெட்க்கு பதிலாக தயிர் பாக்கெட்டை வாங்கிவந்த ரசிகர்களை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் தான் தற்போது டிரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications