ஆமாம் நான் அப்படிப்பட்டவள் தான் நச்சென்று பதிவை போட்ட வனிதா.. யாருக்கு இந்த தத்துவம்?
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய வனிதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு பரவலாக பரவி வருகிறது.
தன்னுடைய கேரக்டரை பற்றி தெளிவாக வனிதா குறிப்பிட்டதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அல்டிமேட் நிகழ்ச்சியில் அறிமுகம்
ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வனிதா விஜயகுமார் இருந்து வந்தார். வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். அதில் பலரும் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கன்னாபின்னாவென கிடைத்துக்கொண்டு இருக்கப்போகிறது. இனி இந்த நிகழ்ச்சி வேற லெவல் தான் என்றெல்லாம் இவரை வைத்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ப்ரோமோவில் கலக்கல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இந்த அல்டிமேட் நிகழ்ச்சி லைவில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கும் ப்ரோமோ தினமும் ஒளிபரப்பாகி வருகிறதுய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 ப்ரோமோ வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் குறைந்தது ஏழு ப்ரோமோ வரைக்கும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த மோதலில் அதிகமாக வனிதாவின் அட்ராசிட்டிகள்தான் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வனிதாவை சுற்றியே பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்று கூட பல நேரங்களில் ரசிகர்களுக்கு எண்ணம் தோன்றியிருக்கிறது.

தொடர்ந்த மனக்கவலைகள்
வாழ்க்கையிலும் சரி சமூக வலைத்தளத்தில் திறந்த புத்தகமாக இருக்கும் வனிதா விஜயகுமார் இந்த அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் ஆரம்ப வாரத்தில் ஹெவியான பர்பாமன்ஸ் மூலமாக ட்ரெண்டிங் பிளேயர் ஆகவும் வீட்டின் தலைவராகவும் கலக்கிக் கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு சக போட்டியாளர்கள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து தன்னால் இருக்க முடியாது என்று கூறி வந்தார். ஏற்கனவே இரண்டு முறை தனக்கு மன அழுத்தமாக இருக்கிறது தன்னை வீட்டிற்கு அனுப்பி விட சொல்லி விட்டு பிக்பாஸ் இடம் அடம் பிடித்து கொண்டு இருந்ததால் அதற்கு பிக்பாஸ் எவ்வளவோ ஆறுதல் கூறி இருந்தார். அது மட்டுமல்லாமல் வனிதாவின் மகள் மூலமாகவும் ஆறுதல் கூறி இருந்தார்.

முதல் பதிவு
தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னால் தொடர முடியாது தனக்கு மனது சரியில்லை என்று வனிதா பிடிவாதமாக கூறியதால், பிக்பாஸில் இவர் வெளியே அனுப்பப்பட்டார். இந்த நிலையில் தற்போது வெளியே வந்ததும் முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அதில் நான் திமிர் பிடித்தவள் என்று நினைப்பவர்களுக்கும், ஒரு மனப்பான்மை உள்ளவர்களுக்கும்..ஆம், நான்தான் மற்றும் எனக்கு ஒரு மனப்பான்மை இருக்கிறது. எனக்கு பிரச்சனை இல்லை... ஆம் மற்றும் நான்தான் என் முன்னுரிமை என்று இவர் தன்னைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களை கூறுபவர்களுக்கு நச்சென்று பதில் கூறியிருக்கிறார். கலக்கலாக தன்னுடைய மகளுடன் இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications