சொன்னதை செய்த வருண்... குதூகலித்த குழந்தைகள்... அன்பு கூட்டணியில் இணைந்த அக்ஷரா
சென்னை: நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வருண் செய்த செயல் தற்போது பலரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
Recommended Video
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் சொன்னதை தற்போது நிறைவேற்றி பல குழந்தைகளின் புன்னகைக்கு காரணமாக மாறி இருக்கிறார்.
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த அக்ஷரா மற்றும் வருண் இருவரும் சேர்ந்து பலபேருக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளனர்.

திரை குடும்பத்து பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். திரை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வருண் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தற்போது அவருடைய பிறந்த நாள் அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருண் பிறந்த நாளன்று அவர் அணிந்திருந்த ஆடையை அவருக்கு மிகவும் பிடித்த குருகுலத்தை சேர்ந்த குழந்தைகள் ரெடி பண்ணி கொடுத்து இருந்ததாம். அதனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவர்களை வந்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.

குழந்தைகளின் அன்பு பரிசு
ஏற்கனவே பலமுறை தான் அந்த இடத்திற்கு சென்று குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி இருக்கிறேன் ஆனால் தற்போது இவர்கள் எனக்கு தந்த கிப்ட் மிகப்பெரியது. அது மட்டுமல்லாமல் மிகவும் சிறப்பானது என்று கூறியிருக்கிறார். நிகழ்ச்சியில் பிறந்தநாளன்று இவர் போட்டிருந்த உடையில் கையாலே எம்ப்ராய்டிங் செய்து சிறப்பாக கொடுத்திருந்த குழந்தைகளை நானும் வந்து பார்க்க வேண்டுமென்று அக்ஷரா விருப்பத்தை தெரிவித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் அந்த குழந்தைகளை சென்று நேரில் சந்தித்து உள்ளனர்.

குழந்தைகளின் வாழ்த்துக்கள்
இவர்களைப் பார்த்ததும் குழந்தைகள் ஒரு பக்கம் குதூகளித்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களைப் பார்த்து இவர்களும் தங்களுடைய சந்தோசத்தை வெளிக்காட்டி இருக்கின்றனர். வருண் நடித்த ஜோஸ்வா திரைப்படத்தின் டிரைலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் அந்த டிரைலரை அந்தக் குழந்தைகளிடம் காட்டி உள்ளார். அதை பார்த்த குழந்தைகள் சந்தோஷமாக நடிப்பு சூப்பராக இருக்கிறது என்று இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்துள்ளனர். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வருண் பகிர்ந்துள்ளார்.

சொன்னதை செய்த வருண்
வருண் செயல்பாடு பார்த்து ரசிகர்கள் குளிர்ந்து போய் உள்ளனர். பலர் அவருக்கு வாழ்த்துக்களையும், அந்த குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும், சிம்பதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வெளியே சென்ற பிறகு அதைப்பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஆனால் வருண் சொன்னதை அப்படியே செய்து விட்டார் என்று அவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications