கையை பிடித்து செல்ல கடி..கொஞ்சும் பிரியா ராமன்.. ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை: அடடா சூட்டிங் ஸ்பாட்டில் பிரியா ராமன் செய்த சேட்டைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சின்னத்திரையின் நீலாம்பரியாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியாராமன் தற்போது அவருடன் நடிக்கும் சக நடிகையுடன் பாசமாக விளையாடும் விளையாட்டு பல பேரின் சந்தோஷத்தின் காரணமாக அமைந்திருக்கிறது.
சீரியலில் எப்போதும் முறைத்துக் கொண்டிருக்கும் இவர் உண்மையில் இவ்வளவு ஜாலியான கேரக்டரா என்று ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டார்களாம்.

வெள்ளித்திரை கதாநாயகி
வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் கதாநாயகியாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த பிரியாராமன் திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இவருடன் கதாநாயகனாக நடித்த ரஞ்சித்தை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக தான் போய்க் கொண்டிருந்தது.இவர்கள் இருவருமே ஒரே துறையில் இருப்பதால் இவர்களுக்கு நல்ல புரிதல்களும் ஆரம்பத்தில் இருந்து கொண்டிருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்குள் சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இருவருமே மீண்டும் சீரியல்களில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகிறார்கள்.

மாற்றம் கொடுத்த திருப்பம்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சில டேனிங் பாயிண்ட் வாழ்க்கையே டோட்டலாக மாற்றிவிடும். அந்த மாதிரி தான் இவர்களுடைய டேனிங்கும் வேற லெவல் மாறிவிட்டது .இவர்கள் இருவரும் சீரியல்களில் காலடி எடுத்து வைத்தாலும் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு இணையாக தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இருவரும் பிஸியாக தங்களுடைய வேலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது பிரியா ரமன் ஜீ தமிழில் முதல்முறையாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதுவும் செம்பருத்தி சீரியலில் ஆதியின் அம்மாவாகவும் பார்வதியின் மாமியாராகவும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் நீலாம்பரி போன்ற பெரிய வில்லியாக இருப்பாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இவருடைய கேரக்டர் முற்றிலும் மாறுபட்டது என்று அனைவருக்கும் நிரூபித்து விட்டார்.

ஜாலியான வீடியோ
தற்போது 2-வது இன்னிங்சில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடி இணைந்தும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து விட்டது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் மீண்டும் இவர்கள் வாழ்க்கையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தனர். ரசிகர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. மீண்டும் இவர்கள் இணைந்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் செம்பருத்தி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது அந்த சீரியலில் இவருடைய சகோதரியாக வனஜா கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் லட்சுமியோடு ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்போ அது எல்லாம் பொய்யா
செம்பருத்தி சீரியலில் இருந்து இவர் விலகப் போகிறார் என்றும், இவர் விலகி விட்டார் என்றும் பல செய்திகள் பரவி வந்த நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவர் ஜாலியாக சூட்டிங் ஸ்பாட்டில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே பல ரசிகர்கள் இவருக்காக தான் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். சீரியலின் கதாநாயகன் உட்பட பலர் இந்த சீரியலில் மாறிவிட்டதால் சீரியல் பலருக்கும் போரடித்துவிட்டது.
ஆனால் இவர் ஒருவராகத்தான் தொடர்ந்து சீரியலிலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவந்த நிலையில் இவருடைய ஜாலியான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இதை பற்றியும் அதிகமானோர் இந்த வீடியோவில் கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications