விஜய்க்கு போட்டியே அவர் மகன் தான்! ஜனநாயகனை முந்தும் வேகம்.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்!
சென்னை: நடிகர் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை போலவே சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நான் அப்பா வழியில் கதாநாயகனாக மாறப்போவதில்லை, இயக்குநர் என்று தாத்தாவை பின் தொடர்கிறார். ஆனாலும் எந்த இடத்திலும் நான் விஜய்யின் மகன் என்று பெருமைபட்டுக் கொள்ளாமல் தனி அடையாளத்துடன் வர முயற்சிகள் எடுக்கிறார்.
ஜோசன் சஞ்சய் இயக்கும் முதல் படமான சிக்மா படத்தை பற்றிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த படம் தமிழில் சினிமா ரசிகர்களுக்கு திரில் அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த மசாலா படமாக இந்த படம் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைக்கா நிறுவனத்திற்கு பெரிய வெற்றி கொடுத்தவர் நடிகர் விஜய். அவருடைய கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைக்கா இப்பொழுது அவருடைய மகன் ஜோசப் சஞ்சய் படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று பெரிய முடிவை எடுத்திருந்தனர்.
விஜய் இப்போது சினிமாவில் டாப் நடிகராக இருந்தாலும் அவருடைய மகன் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். சிக்மா படபிடிப்பு முடிந்து விட்டதாகவும் படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் பட குழு இதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் அப்டேட் தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கிறது. அதில் விஜய் என்னவெல்லாம் பேசுவார்? என்ற எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
காரணம் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு கட்சி கூட்டங்களில் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் ஜனநாயகன் படம் விஜய்க்கு கடைசி படம் என்று கூறப்படுவதால் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஜோசன் சஞ்சய் படத்தின் டீசரை வரும் 23ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதால் அப்பாவுக்கு மகன் தான் போட்டியாக வருகிறார் என்றும் சிலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.
பொதுவாக புது படங்கள் தியேட்டரில் வெளியாக போகும் போது அடுத்து வரப்போகும் படத்தின் டீசர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும். அப்படி பார்க்கும்போது ஜனநாயகன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் சிக்மா படத்தின் டீசரையும் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!












Click it and Unblock the Notifications