Vijay TV Pugazh: தந்தை இறப்பு குறித்து உருக்கமாக பதிவு போட்ட விஜய் டிவி புகழ்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜய் டிவி மூலம் மக்கள் மனதில் தனித்த இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் புகழ். எப்போதும் சிரிப்பு, நகைச்சுவை, எளிமை என்ற அடையாளங்களோடு ரசிகர்களை மகிழ்வித்தவர், இன்று தனது வாழ்க்கையின் மிகப் பெரிய துக்கத்தை எதிர்கொண்டிருக்கிறார். நடிகர் புகழின் தந்தை காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான தகவலை, புகழ் தானே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல், மிக எளிமையாகவும், மனம் உடைந்த நிலையிலும் அவர் வெளியிட்ட அந்த பதிவு, பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த பதிவில், "என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டியே தெய்வமே.. இப்போ சொல்லாம போயிட்டியே" என்று உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார். ஒரு நடிகராக மக்களை சிரிக்க வைக்கும் புகழ், ஒரு மகனாக தந்தையை இழந்த வலியை அந்த பதிவில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

புகழ் என்ற பெயர் இன்று தமிழ் ரசிகர்களுக்கு புதிதல்ல. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி உலகில் அறிமுகமான அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உண்மையான பிரபலமாக மாறினார். குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2-ல் அவரது காமெடி, உடல் மொழி, இயல்பான பேச்சு ஆகியவை குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த நிகழ்ச்சி தான் புகழின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, புகழுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அயோத்தி, 1947, யானை போன்ற படங்களில் நடித்ததன் மூலம், நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல, கதைக்கு தேவையான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகர் என்பதையும் அவர் நிரூபித்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணித்த புகழ், தன்னுடைய கடின உழைப்பின் மூலம் இந்த இடத்தை அடைந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புகழின் இந்த வளர்ச்சிக்கு, அவரது குடும்பம், குறிப்பாக தந்தையின் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்ததாக பல முறை அவர் பேட்டிகளில் கூறியிருக்கிறார். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் உருவாக்கிய புகழுக்கு, அவரது தந்தை தான் முதல் தூணாக இருந்தார் என நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தந்தை மறைவுச் செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் புகழுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். "வலிமையாக இருங்கள்", "உங்கள் தந்தையின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்" போன்ற வார்த்தைகள், புகழுக்கு ஆதரவாக குவிந்து வருகிறது.
எப்போதும் மக்களை சிரிக்க வைக்கும் நடிகர் புகழின் வாழ்க்கையில், இன்று சோக நாள். ஆனால், அவர் தந்தை விட்டுச் சென்ற நினைவுகளும், ஆசீர்வாதங்களும், புகழின் பயணத்தை தொடர்ந்து வழிநடத்தும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications