Vijay TVK : விஜய் கட்சிக்கு போனதால இனி சினிமா வாய்ப்பு வராதுன்னு சொல்றாங்க! நடிகர் ஜீவா ரவி உருக்கம்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல துணை நடிகரான ஜீவா ரவி சில நாட்களுக்கு முன்புதான் இணைந்திருந்தார். அதற்கு பிறகு அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நான் விஜய் கட்சியில் சேர்ந்ததால் இனி உங்களுக்கு சினிமா வாய்ப்பு வராது என்று சிலர் சொல்கிறார்கள் என்று சில தகவல்களை பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மும்மரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக பாஜக கட்சிகளை எதிர்த்து மாற்று அரசியல் என்கிற அடையாளத்தோடு தமிழக வெற்றிக்கழகம் எப்படி தாக்கத்தை ஏற்படுத்து போகிறது என்று எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றி கழகத்தில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து அரசியல் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இணைந்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து நடிகர் ஜீவா ரவி தவெகாவில் இணைந்து கொண்டார்.
ஜீவா ரவி அந்த கட்சியில் இணைந்ததும் நேரடியாக செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது, எங்களுடைய குடும்பம் மிகப்பெரிய பின்னணி கொண்டது. கடந்த சில ஆண்டுளாகவே ஏதாவது சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் திமுக, அதிமுகவில் சேர விருப்பமில்லை.
நான் விஜய்யுடன் கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறேன். என் மகன் கல்யாணத்தை அவர்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விஜய் அரசியலுக்கு வர போகிறார் என்ற பேச்சு தொடங்கியதில் இருந்து அவருடைய அரசியல் பயணத்தை கவனித்து வருகிறேன். அது எங்களுக்கு திருப்தி கொடுப்பது போலவே இருக்கிறது. என்னுடைய சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். செங்கோட்டையன் அண்ணனை எங்கள் குடும்பத்திற்கு பல வருடங்களாக தெரியும் அதனால் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என்று பேசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது நான் விஜய்யின் கட்சியில் சேர போகிறேன் என்றுமே பலர் இனி உங்களுக்கு அவங்க வாய்ப்பு தர மாட்டாங்க, இவங்க வாய்ப்பு தர மாட்டாங்க என்று சொன்னார்கள். அதற்கு நான் இங்க பாருங்க நாம எல்லாருமே மனுசங்க தான் அப்படி யாராவது வாய்ப்பு மறுத்தால் வராமலே போகட்டும். நான் இப்போ அதைவிட பெட்டரா ஒரு விஷயத்தை நான் பண்ணுறேன். சினிமா என்பது என்னுடைய ப்ளட்லையே இருக்கு.
எங்க ஃபேமிலியில் என்னுடைய தாத்தா எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு அதிகமா ப்ரொடியூஸ் பண்ணுனவாரு. அதனால எங்க ஃபேமிலி சினிமா ஃபேமிலி. எங்களுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்காம விடாது. எப்படியும் சிலர் கொடுக்காமல் இருந்தாலும் சரி, யாராவது ஒருவர் எங்களுக்கு தந்தது விடுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே போல இப்போ இருக்கிற சூழ்நிலையில் அப்படி யாரும் வாய்ப்பு மறுப்பதாக எனக்கு தோணவில்லை. இவங்க நம்மகிட்ட இப்படி சொல்லுறதை நினைச்சு நாமாக எதையும் நினைக்க கூடாது. ஏன்னா மத்தவங்க நம்மை பத்தி அப்படி நினைத்து இருக்க கூட மாட்டாங்க ஆனால் சிலர் நம்மை பயமுறுத்துவாங்க அவ்வளவுதான் என்று ஜீவா ரவி பேசியிருக்கிறார்.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவில் கையெழுத்திட்டார் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!












Click it and Unblock the Notifications