ஆத்தா நான் பாஸாயிட்டேன்.. கையைத் தூக்கி கோலாகலமாக குதூகலித்த ரம்யா!
சென்னை : கையை தூக்கி குதுகலமிடும் ரம்யாவைப் பார்த்ததும் என்னவா இருக்கும் என தெரியாமலே ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். ஆத்தா நான் பாசாயிட்டேன்னு போட்டுள்ளார் ரம்யா.
அடடா இந்த ஊரடங்கு நேரத்தில் மேலும் தனது அறிவுதிறமையை நிரூபித்து கொண்டாடி வருகிறாரே நம்ம ரம்யா சுப்பிரமணியன் என்று ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர். ஆனால் என்ன பாசானார் என்பதுதான் தெரியவில்லை.
உடற்பயிற்சி செய்கிறேன் என்று இவர் நாளுக்கு நாள் உடம்பை குறைத்து, அழகை கூட்டி, வயதை குறைத்துக் கொண்டே வருகிறாரே என்று பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் புலம்ப தவறுவதில்லை.

கையை தூக்கி கலக்கல்
16 வயதிலேயே திரைப்படத்தில் ஸ்ரீதேவி ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று வயல் வரப்பில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கொண்டிருந்தோம். ஆனால் இப்போது வயல் வரப்பு ஏதுமில்லாததால் வீட்டுக்குள்ளேயே கையை தூக்கி ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று ரம்யா போட்ட போஸ்ட் தான் இப்போ செம வைரலாக இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. தேர்வில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அரவணைப்பு இதோ என்று கையைக் தூக்கியிருக்கிறார். அவர் என்ன எழுதி பாசானார் என்பதுதான் ஒரே மர்மமமாக இருக்கிறது. கம்ப்யூட்டரை வேறு ஆன் செய்து வைத்துள்ளார்.

அதுக்கு ரெடியான ரசிகர்கள்
சும்மாவே ஜொள்ளு விடும் ரசிகர்கள் இவர் இந்த மாதிரி சொன்னதும் ஹக் பண்ணுவதற்கு நாங்களும் ரெடி என்று க்யூவில் வரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் நேரடியா பண்ண முடியாது.. ஆன்லைனிலேயே ஹக் பண்ணிக்கலாம் என்றும் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். என்ன எக்ஸாமில் பாஸ் ஆனார் என்றே தெரியாமல் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. உடற்பயிற்சியிலும் படிப்பிலும் ஆர்வத்தை கொண்ட இவர் தற்போது புதியதாக ஏதும் டிகிரி கோர்ஸ் முடித்து இருக்கிறாரா??அல்லது ஊட்டச்சத்து வல்லுனராக மாறுவதற்கு ஏதும் கோஸ் முடித்திருக்கிறாரா என்று பல்வேறு கருத்துக்கள் இவரை வைத்து சமூக வலைத்தளத்தில் கிளம்பி வருகிறது. ஒரு போஸ்ட் போடுவதற்கு முன்பு அதைப்பற்றி தெளிவாக போட வேண்டாமா என்றும் சிலர் செல்லமாக கோபப்பட்டுள்ளனர்.

பேச்சிலேயே மெய்மறக்க வைத்துவிடுவார்
ரம்யா தொகுப்பாளராக அறிமுகமாகி பல டிவி நிகழ்ச்சிகளையும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவருடைய தமிழ் பேச்சு திறமையை பார்த்து பலர் மெய்மறந்து ரசித்து இருக்கின்றனர். அந்த அளவிற்கு இவருடைய திறமை இருந்தாலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால் திரைப்படங்களை எல்லாம் விடவும் இவருக்கு தொகுப்பாளராக தான் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து இருக்கிறார். இவரது பேசும் ஸ்டைலும், புன்னகையும், அழகு சிரிப்பும்தான் ரம்யாவுக்கு கோடானு கோடி ரசிகர்களை ஈர்த்துக் கொடுத்தது. தற்போது அதையும் தாண்டி சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்தி ரொம்பவே பிரபலம் அடைந்து விட்டார். இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட்டதும் இவருக்கு லைக்குகளையும் போடும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இவர்தான் ரோல் மாடலாமே
இவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பல்வேறு துயர சம்பவங்களையும் இவர் தாண்டி தன்னுடைய துறையில் ஜெயித்துக் கொண்டே தான் இருக்கிறார். இவரைப் பார்த்து பல பெண்கள் தங்களுடைய ரோல்மாடலாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த அளவிற்கு பெண்களையும் மட்டுமல்லாமல் ஆண்களையும வசீகரித்து வைத்திருக்கிறார். இவருடைய திறமையாலும் அழகாலும் அனைவரையும் மனதை கவர்ந்த இவர் தற்போது உடற்பயிற்சிகளையும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். உடல்நிலை பிரச்சினை காரணமாகவும், இயற்கையான காரணங்களாளும் ஒருசிலர் உடல் எடை கூடிவிட்டால் தங்களால் இனி உடல் எடையை குறைக்க முடியுமா என்று பீல் பண்ணி கொண்டிருக்கும்போது இவருடைய எளிமையான உடற் பயிற்சிகளையும் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் பார்த்தவர்கள் இவரை இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சேனல்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த குரூப்பா நீங்க?
இதுவரைக்கும் இவர் பல போட்டோ ஷூட் போட்டோஸ்களையும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது ஆன்லைன் எக்ஸாமில் பாஸ் பண்ணியிருக்கும் போட்டோவை சந்தோஷமாக வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்ததும் பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் ஒருசில நெட்டிசன்கள் தங்களுக்கு நேரம் போக வேண்டுமே என்று இவரை கலாய்த்து வருகின்றனர். நீங்க கோரானா குரூப்பா? இது எப்ப போட்ட அரியர்ஸ்! எல்லாமே கிளியரா? என்று நக்கல் பண்ணியும் வருகின்றனர். ஆனால் ரம்யா எக்ஸாம் ரிசல்ட் என்ன என்று கேட்கிறீர்களா முழு மதிப்பெண்களையும் நான் பெற்று விட்டேன். 30க்கு 30 என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒரு கேப்ஷன் வேற போட்டிருக்கிறார். 'ஆத்தா நான் முழு மதிப்பெண்கள் வாங்கி பாஸ் ஆயிட்டேன்' என்று இப்படி போஸ்ட் போட்டா கூட பரவாயில்லையே ..கடைசியில் கையை விரித்து இவர் நிற்பதை பார்த்து தான் பல பேர் கியூவில் நின்று கொண்டிருக்கின்றனர்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications