"விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்” அர்ணவ் பதிவு... குவியும் கருத்துக்கள்... இது அதுக்குத்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன அர்ணவ் திடீரென தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் அர்ணவின் மனைவி வளைகாப்பு அவர் இல்லாமல் நடைபெற்ற நிலையில், அவர் இப்போது வெளியிட்ட பதிவிற்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலின் கதாநாயகியை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி நண்பர்களாக பழகி, பின்பு காதலர்களாக மாறி சில வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் திருமணம் செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அர்ணவின் மனைவி ஆன திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நண்பர்களால் வளைகாப்பு

நண்பர்களால் வளைகாப்பு

கணவன் மனைவி பிரச்சனைக்கு காரணம் செல்லம்மா சீரியலின் கதாநாயகி தான் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலுக்கு சென்று வந்திருந்தார். அர்ணவ் மனைவியான திவ்யாஸ்ரீதர் ஐந்தாவது மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ,இவருடைய மனைவிக்கு சின்னத்திரை நடிகர்கள் பலர் சேர்ந்து எளிமையாக வீட்டிலேயே வளைகாப்பு பங்க்ஷன் செய்திருக்கின்றனர். ஆனால் அதைக் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மீண்டும் நீங்கள் சேர்ந்து வாழலாம் என்று பலர் அறிவுரை கூறி வந்தாலும் இவர்களுக்குள் பிரச்சனை சமீப காலமாக வெளியே தெரியாத வண்ணமாக அமைதியாக தான் இருக்கிறது.

அர்ணவ் பதிவு

அர்ணவ் பதிவு

ஆனாலும் மனைவியின் வளைகாப்புக்கு அர்ணவ் செல்லவில்லையே என்று சிலர் கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் நிலையில், இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்... விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்.. இவைதான் மனிதனின் எண்ணங்கள்...! "என்று பதிவை வெளியிட்டு தன்னுடைய புகைப்படத்தை அதற்கு பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அப்போ இவர் திவ்யாவோடு சேர்ந்து வாழத்தான் நினைக்கிறாரா? என்று இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

இன்னும் ஒரு சில ரசிகர்கள் இவருடைய கருத்தை சீரியலின் கதையோடு இணைந்து பேசி வருகிறார்கள் .சீரியலில் இவரிடம் இவர் செல்லம்மாவிடம் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கும் நிலையில் செல்லம்மா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அதற்காகத்தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அர்ணவ் இந்த பதிவை வெளியிட்டு ஒரு சில மணி நேரங்களுக்குள் லைக் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவை பார்க்கும் போதே தெரிகிறது. இதனால் தான் இவர் ஜெயிலில் இருக்கும் போது கூட இவருக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்காமல் சீரியல் அணியினர் இருந்திருக்கிறார்களா? என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+