சன் டிவி சீரியல்களின் முன்னணி வரிசையில் மாற்றம்.. எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ரசிகர்களின் மனதை கவர்ந்து டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் முன்னணியில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை தற்போது ஒளிபரப்பாக தொடங்கிய இனியா சீரியல் முந்தி இருக்கிறது.
ரசிகர்களை அதிகமாக கவர்ந்து கிராமங்கள் மற்றும் நகரப்புறங்களில் ஒளிபரப்பான டி ஆர் பி யின் அடிப்படையில் முதல் 6 இடங்களில் இருக்கும் சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

1. கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அடுத்தடுத்ததாக கடந்த வாரத்தில் அதிகமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று கயல் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.48 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2. வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் பொன்னியின் மனமாற்றம் சின்ராசுவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என பரபரப்பான எபிசோடுகளின் காரணமாக இந்த சீரியல் 10.61 அளவைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3. சுந்தரி சீரியல்
சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு கண் பார்வை இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் கார்த்தி சுந்தரிக்காக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இந்த சீரியல் 10.46 பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது

4. கண்ணான கண்ணே
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் ஆரம்பத்தில் தன்னுடைய மகள் மீராவை ஏற்றுக் கொள்ளாத கௌதம் தற்போது தான் மனம் திருந்தி மீராவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சாமியார் சொன்னதற்காக மீரா தன்னுடைய தந்தையை பிரிந்து செல்கிறார். இந்த பரபரப்பான திருப்பங்களால் இந்த சீரியல்10. 03 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5. இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடங்கிய இரண்டு வாரங்களிலேய ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இனியாவை பழிவாங்குவதற்காக திருமண நாடகம் நடைபெறுவதால் இந்த சீரியல் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான வரவேற்பால் 9.18 ஒரு பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, எதிர் நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு வீட்டு மருமகள் அனைவரும் சென்றிருக்கும் நிலையில் ஆதிரையின் காதல் ரகசியங்கள் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இந்த சீரியல் 9.09 பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும் தற்போது இந்த சீரியல் பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications