"அந்த ஒரு சீன் மட்டும் இல்லன்னா!?” இயக்குனர் திருமுருகனை பற்றி நெகிழ்ச்சியாய் பேசிய சரண்யா
சென்னை: இயக்குனர் திருமுருகன் இயக்கிய முதல் திரைப்படம் ஆன எம் மகன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சரண்யா பேசிய வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
முதல் முதலாக தன்னுடைய காமெடி நடிப்பை வெளிக்கொண்டு வந்தது இயக்குனர் திருமுருகன் தான் என்று உணர்வு பூர்வமாக சரண்யா பேசியிருக்கிறார்.
கோயிலின் அருகில் சரண்யா எம் மகன் திரைப்படத்தில் உருளுவது போன்ற ஒரு சீன் வரும் அது எப்படி உருவாக்கப்பட்டது என்று சரண்யா கூறி இருக்கிறார்.

திருமுருகனின் முதல் திரைப்படம்
சின்னத்திரையில் சீரியல்களை இயக்கி வந்த திருமுருகன் முதல் முறையாக எம் மகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெள்ளி துறையில் வாய்ப்பை கொடுத்து வளர்ச்சியை கொடுத்திருந்தது. முதல் திரைப்படம் இவர் எதிர்பார்த்த மாதிரியே வெற்றி அடைந்து விட்டது. அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் தங்களுடைய இன்னொரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டி இருந்தனர். அதில் நாசர் அனைவரையும் திட்டி தீர்க்கும் ஒரு தந்தையாக டெரர் பேஸ் ஆக நடித்து இருப்பார் .பாசத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே முரட்டுத்தனமாக இருக்கும் நாசரின் இன்னொரு முகம் வெளியே வந்தது.

சரண்யாவின் எதார்த்தமான நடிப்பு
அதுபோல நடிகை சரண்யா இந்த திரைப்படத்தில் கணவருக்கு பயந்த மனைவியாக நடித்திருப்பார். அவருடைய கணவரிடம் இவர் சின்ன சின்ன பொய்களை சொல்லி மாட்டிக் கொள்ளும் போது நடிப்பதை பார்த்து தான் இவருக்கும் காமெடி நடிப்புத் திறமை இருக்கிறதே என்று பலர் புரிந்து இவருக்கு அதிகமான காமெடி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்ததாம். அதை குறித்து சரண்யா தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணமானவர்களில் இயக்குனர் திருமுருகன் ஒருவர் என்று கூறி இருக்கிறார். திரைப்படத்தில் சரண்யா அவருடைய அப்பா வீட்டிற்கு சென்றிருப்பார். அது நாசருக்கு பிடிக்காது அதனால் வீட்டில் இருப்பவர்கள் சரண்யா கோவிலுக்கு சென்று இருப்பதாக கூறி இருப்பார்கள். சரண்யாவை குன்னக்குடி கோவிலில் தேடி வருவதால் அங்கே கோவிலின் வாசலில் சரண்யா அங்க பிரதோஷணம் செய்வது போன்ற ஒரு சீன் இருக்கும்.

சரண்யாவின் கண்டிஷன்
நடுத்தெருவில் வெயிலில் அங்க பிரதோஷணம் செய்வதற்கு சரண்யா சம்மதிக்கவே மாட்டேன் என்று இந்த சீன் உருவாக்கும்போது சொல்லிவிட்டாராம். நடிப்பாக இருந்தாலும் இந்த வெயிலில், உடம்பில் நீர் ஊற்றி கொண்டு மண்ணில் உருளுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது ,அப்படி என்னால் செய்ய முடியாது என்று சரண்யா உறுதியாக சொல்லியிருந்தாராம். அப்போது திருமுருகன் அவரிடம் பலமுறை கெஞ்சி இருந்தாராம் ஆனால் அதற்கு இவர் செவி சாய்க்காததால் வடிவேல் அந்த சீனை நான் செய்கிறேன் என்று கூறியிருந்தாராம் அதற்கு சரண்யாவும் ஓகே என்று சொல்லிவிட ,பிறகு சரண்யாவை தனியாக அழைத்து திருமுருகன் தயவுசெய்து ஒருமுறை மட்டும் இதை நடித்துக் கொடுங்கள் என்று கெஞ்சி இருந்தாராம். அதற்காக இவர் ஒரு வாட்டி மட்டும் தான் செய்வேன் இதில் டேக் போகக்கூடாது என்று கண்டிஷன் போட்டு தான் நடித்தாராம். ஆனால் அந்த சீன் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பையும் எதிர்காலத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று சரண்யா உணர்வுபூர்வமாக கூறியிருக்கிறார்.

நெகிழ்ச்சியான வார்த்தைகள்
நடிகை சரண்யாவிற்குள் இருக்கும் காமெடி திறமையை இந்த ஒரு சீன் தான் வெளியே கொண்டு வந்தது. இன்று எனக்கு அவார்ட் கூட கிடைத்திருக்கிறது அதற்கு காரணம் திருமுருகன் தான் அவர் அன்று என்னுடைய மனதை மாற்றி அந்த சீனில் நடிக்க வைக்கவில்லை என்றால் என்னால் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தனக்கு பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தாலும், காமெடியோடு சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு திருமுருகனுக்கு தான் நன்றி சொல்ல எப்போதும் கடமைப்பட்டவர் என்று இவர் கூறிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications