மீண்டும் செல்லமா சீரியலில் அர்ணவ்.. இந்த நிலையில் இப்படி ஒரு பதிவு தேவையா? குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: குடும்ப பிரச்சனை காரணமாக ஜெயிலில் இருந்து பெயிலில் வந்த அர்ணவ் அவர் நடித்து வந்த செல்லம்மா சீரியலில் மீண்டும் நடித்து வருகிறார்.
இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அர்ணவ் அவருடைய மனைவியோடு பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவருடைய புகைப்படத்திற்கு வெளியிட்ட கேப்ஷன் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்து வேறுபாட்டுக்கு காரணம் அந்த நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் சித்து கேரக்டரில் நடித்துவரும் அர்ணவ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். 5 வருடங்கள் ஒற்றுமையாக காதலித்து வந்த இவர்கள் தற்போது ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது .இவர்களுடைய பிரச்சனைக்கு காரணம் அர்ணவ் உடன் செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் அன்ஸிதா தான் காரணம் என்று திவ்யா குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

மாற்றப்பட இருந்த கதாநாயகன்
சீரியல் நடிகர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது .இருவரும் குற்ற சாட்டுகளை மாறி மாறி சுமத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திவ்யா தன்னுடைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அர்ணவ் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருந்து அவர் பெயிலில் வெளியே வந்திருக்கிறார். இவர் ஜெயிலில் இருக்கும் போது இவர் நடித்து வந்த செல்லம்மா சீரியலில் இவருக்கு பதில் வேறு கதாநாயகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த நேரத்தில் திவ்யா தனக்கு சீரியல் தரப்பிலிருந்து சப்போர்ட் கொடுத்து வருவதாகவும், நியாயம் எப்போதும் தோற்காது என்றும் பதிவு வெளியீட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

மீண்டும் அதே சித்து
இந்த நிலையில் பெயிலில் வந்திருக்கும் அர்ணவ் மீண்டும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடித்த எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். இவர்கள் இருவருடைய குடும்பப் பிரச்சனையின் காரணமாக அதை வேலையில் காட்ட வேண்டாம் என்று சிலர் அறிவுரை கூறி வருகின்றனர் .இன்னும் ஒரு சிலர் திவ்யாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அதுபோல மீண்டும் அர்ணவ் சீரியலுக்கு வந்தது தங்களுக்கு மகிழ்ச்சி என்றும் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர் .

இப்படி ஒரு பதிவு தேவையா
ஒரு சிலர் நெட்டிசன்கள் அர்ணவ் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி அவரைப் பற்றி பல தகவல்கள் வெளியே வந்த பிறகு மீண்டும் இவர் ஹீரோவாக நடிப்பதால் இவரை பார்த்து பலரும் வில்லத்தனம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ணவ் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் "காதலில் வாழும் வாழ்க்கை எப்போதும் மந்தமாக இருக்காது" என்று கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் திவ்யாவை குறித்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? அல்லது அன்ஸிதாவை குறித்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? என்று குழப்பத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications