விக்ரமன்,ஷிவின் உறவு பற்றி தப்பாக கேட்ட ஜனனி.. இப்படி கேள்வி கேட்கலாமா ? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் ஷிவின் மற்றும் விக்ரமன் உறவைப் பற்றி ஜனனி பேசியதை குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனனிக்கு ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது அவர் அமுதவாணனுடன் சேர்ந்து விளையாடி வருவதை பார்த்து காண்டான நெட்டிசன்கள் அவர் மீது கோபத்தில் இருக்கும் நிலையில் நேற்று எபிசோட்டில் இவர் பேசிய வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆரம்பத்தில் அமோக வரவேற்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியை என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு சீசனிலும் ஆரம்பத்தில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவோடும் வலம் வரும் ரசிகர்கள் போக தங்களுடைய சுயரூபத்தை காட்டி ஏதாவது சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக ரசிகர்களின் அதிர்ப்த்தியை பெற்று விடுகின்றனர் .அந்த வகையில் தற்போது ஜனனியும் இடம் பிடித்திருக்கிறார். இலக்கையில் இருந்து ஒரு செய்தி வாசிப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான ஜனனிக்கு ஆரம்ப காலகட்டத்தில் அமோகமான வரவேற்பு இருந்தது.

ஜனனி கேட்ட கேள்வி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் எபிசோட்டில் இவருடைய குழந்தை தனமான எக்ஸ்பிரஷனை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்தான் இந்த சீசசீசன் டைட்டில் வின்னர் என்று கூறி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல அமுதவாணனுடன் இவர் சேர்ந்து விளையாடி வருவது சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்படைய செய்திருக்கிறது .இந்த நிலையில் இவர் நேற்றைய எபிசோடில் ஷிவினை பார்த்து விக்ரமன் உனக்கு பாய் பிரண்டா? என்று கேட்கிறார். அதற்கு ஷிவின்,ஜனனியை அடித்து அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறுகிறார்.

ரசிகர்களுக்கு ஏற்படும் பயம்
ஜனனி கேட்ட கேள்விக்கு வெளியே சிரித்தபடி அமுதவாணன் உனக்கு அண்ணனா? என்று கேட்க அதற்கு ஜனனி அவர் அண்ணன் கிடையாது போட்டியாளர் என்று கூறுகிறார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஜனனியை திட்டி வருகின்றனர். இந்த வாரம் ஜனனி நாமினேஷன் லிட்ஸ்டில் இருப்பதால் இவர் இந்த மாதிரி செய்தால் இவருடைய பெயர் கெட்டுப் போய்விடுமே என்று இவருடைய ஜனனியின் ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

இருவருக்கும் கருத்து ஒற்றுமை
இந்த முறை ஷிவின் கணேசன் திருநங்கையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் .இது அவருடைய சமூகத்தினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்களை பட்டு இருந்தாலும் தற்போதைய வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட வேண்டும் என்று பலர் இவருக்காக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை காட்டி ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருக்கும் ஷிவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அந்த அளவிற்கு யாரிடமும் ஒட்டாமல் தான் ஆரம்பத்தில் இருந்தார். தற்போது தான் இவர் அனைவரிடமும் பழக தொடங்கி இருக்கிறார் .அதிலும் விக்ரமன் உடன் நட்பாக பழகி வருகிறார். இருவருடைய கருத்துக்களும் பல நேரங்களில் சரியானதாக இருப்பதால் ,இவர்கள் இருவரும் இருவருக்கும் பல நேரங்களில் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த ஜனனி இப்படி ஒரு கேள்வி கேட்டது தவறு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications