முதல் முறை விக்ரமன் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி செய்தியை கூறி இருக்கிறார்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் முதல் முறையாக நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.
பொங்கல் நாளில் மக்கள் அறம் வெல்லும் என்று கோலம் போட்டதை வைத்து தனக்கு கிடைத்த வெற்றி ஆக மகிழ்ந்திருக்கிறார்.
விரைவில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அதை அபிசியல் ஆக விரைவில் கூறுவேன் என்று விக்ரமன் கூறி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் தாக்கத்திலிருந்து அதிகமான ரசிகர்கள் வெளியே வராமல் இருக்கின்றனர். காரணம் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று ஆரம்பத்தில் இருந்து அடித்து கூறி தங்களுடைய மனதில் பதிய வைத்திருந்த நிகழ்வு கடைசி நேரத்தில் அழிக்கப்பட்டதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் புலம்பி கொண்டிருக்கின்றனர். பல ரசிகர்கள் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியையும் புறக்கணித்து வருகின்றனர்.

முதல் வீடியோ
இந்த நிலையில் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து விக்ரமன் எப்போது பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அந்த வீடியோவில் விக்ரமன், வணக்கம் உங்க எல்லோருக்கும் நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்க விரும்புகிறேன். நீங்க எவ்வளவு சப்போர்ட் என் மேல காட்டுனீங்க என்பதை வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்த பிறகு தான் என்னால உணர முடிஞ்சது. அவ்வளவு அன்பும் ஆதரவும் ஆர்கனிகா, தன்னிச்சையாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் காண்பித்ததற்கு மிகப்பெரிய நன்றி என்று கூறி இருக்கிறார்.

பொங்கல் நாள் கோலம்
அதற்கு ஒரு சின்ன உதாரணம் கூற வேண்டும் என்றால் பொங்கல் நாளில் தாய்மார்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் போது அறம் வெல்லும் என்பதையும் சேர்த்து போட்டு இருக்கீங்க, இதைவிட பரிசு வேற என்னவாக இருக்க முடியும். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்புக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். இருந்தாலும் உங்களுடைய மனநிலை என்ன என்பதை நான் உணர்கிறேன். இது வந்து உங்களுக்கு வெறும் நன்றி கூறியதற்கு உள்ள வீடியோ இல்லை.

விரைவில் சந்திப்பு
நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் அது என்னவென்றால் நான் உங்களை சந்திக்க வேண்டும். அந்த மீட் விரைவில் நடக்கப் போகிறது. அது எப்போ என்பதை அபிஷியலாக நான் அனேன்ஸ் செய்கிறேன். சோ மறுபடியும் சொல்கிறேன், உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. "அறம் வெல்லும்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை சில நிமிடங்களில் அதிகமான ரசிகர்கள் லைக் செய்து இருக்கின்றனர். பலர் இதை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர் .இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளராகவும் விக்ரமனின் நண்பராகவும் இருந்த எடிகே இந்த வீடியோவிற்கு "உன்னை பார்க்க வரும் வழியில் நானும்" என்கிற கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இதையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications