
விஜே அர்ச்சனா கணவரை குறித்து வெளியிட்ட பதிவு... இவர்களுக்குள் இத்தனை பிரச்சனை நடந்திருக்கிறதா?
சென்னை: ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கும் விஜே அர்ச்சனா தன்னுடைய கணவர் குறித்து வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
படபடவென பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் விஜே அர்ச்சனாவின் வாழ்க்கையில் இத்தனை போராட்டங்கள் நடந்திருக்கிறதா? என்று பல கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை கைதால் பரபரப்பு

இப்போ சினிமா தெரியலிலும் அறிமுகம்
தொகுப்பாளர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அவர்களுடைய பெயர்கள்தான் நினைவிற்கு வரும் அந்த வகையில் பலருக்கும் டக்கென்று நினைவிற்கு வரும் ஒரு தொகுப்பாளராக வி ஜே அர்ச்சனா இருந்து வருகிறார். இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய மகளோடும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இருபதாவது திருமண நாள்
வி ஜே அர்ச்சனாவின் கணவர் ஒரு ராணுவ வீரர். சாரா என்கிற ஒரு மகள் மட்டும் தான் அம்மா மற்றும் தங்கையோடு சேர்ந்துதான் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய திருமண நாளை கணவரோடு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய கணவரை குறித்து விஜே அர்ச்சனா வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது. அதில், நாங்கள் சந்தித்து 20 வருடங்கள் ஆகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாங்கள் ஒரு எளிய பிறந்தநாள் ஆசைக்காகப் பேசினோம், நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை !!

சின்ன சண்டைகள்
சின்னச் சின்ன சண்டைகள் முதல் "இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது" என்ற வரிகள் வரை, எங்கள் வசதியான வீட்டில் ஒரு பெரிய கப் காபி குடிப்பது, டிவி ரிமோட் மற்றும் படுக்கையில் இடவசதிக்காகப் போராடுவது, ஒருவருக்கொருவர் பர்சை எட்டிப் பார்ப்பது வரை. மற்றவர்களிடமிருந்து மட்டுமே செலவழித்து, இரண்டு தசாப்தங்களை ஒன்றாகக் கழித்தோம்.

விலையுயர்ந்த பொக்கிஷம்
நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் - நான் எங்கும் செல்லமாட்டேன், அதனால் நீங்களும் நானும் உங்களை ஒருபோதும் விடுவதில்லையா!! நாங்கள் உன்னை டன் கணக்காக நேசிக்கிறோம், நீங்கள் எங்களின் மிகவும் விலையுயர்ந்த (எரிச்சல் தரும்) பொக்கிஷம்!உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான 47வது காதல் மற்றும் இன்னும் பல வர வாழ்த்துக்கள் !! அன்பின் தீப்பொறியின் 20வது ஆண்டு வாழ்த்துக்கள்!! என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்குள் இவ்வளவு பிரச்சனைகள் எல்லாம் நடந்திருக்கிறதா? என்று வியப்பாக இருந்தாலும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.