அக்ஸராவுக்கு ஸ்பெஷல் தோசை மட்டுமா???சிரிப்பும் தான்..கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுமுகமாக அறிமுகமானாலும் தனக்கென மனதில் சிரித்தே இடத்தை பிடித்துவிட்டார் அக்ஸரா.
ஒவ்வொருக்கும் சிறப்பம்சம் இருப்பதுபோல இவர் தனக்கே உரிய அந்த க்யூட்டான சிரிப்பால் சிலிர்க்க வைத்து வருகிறார்.
என்னதான் என்னை பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் தனக்கு உரிய தனித்தன்மையினால் தனித்து நிற்கிறார் அக்ஸரா.

வெற்றியான ரியாலிட்டி ஷோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் பலரும் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்றும் இது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற கோணத்தில் பலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று சொல்லும் வகையில் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். ரசிகர்களின் ஆதரவுதான் தொடர்ந்து ஐந்தாவது சீசனில் தற்போது அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
Recommended Video

ஐந்தாவது சீசன் தொடக்கம்
இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது ஐந்தாவது சீஸனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருக்கின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் ஆதரவு உண்டு என்பதை தற்போது தமிழ் ரசிகர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனின் அதிகமான பெண்கள் கலந்து கொண்டிருப்பது இளைஞர்களுக்கு என்டர்டைன்மென்ட்டாக இருந்துவருகிறது. அதனாலேயே தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மிகளை தொடங்கிவிட்டனர். அதில் ஒருவராக அக்ஸரா இடம் பிடித்திருக்கிறார்.

என்னது தோசை அக்ஸராவா
இந்த சீசனில் முதல் வாரத்தில் சமையலறையில் இவர் இடம்பெற்றிருந்தாலும் எனக்கு சமையலில் அறிந்ததெல்லாம் தோசை தான் என்று அனைவருக்கும் தோசை சுட்டு கொடுத்து தோசையின் மீது பலருக்கும் காதல் வர வைத்து விட்டார். அக்ஸரா தோசை, ஸ்பெஷல் தான் நாம் எந்த நேரத்திலும் தோசை கேட்டாலும் சலிக்காமல் இரண்டு கையாலும் மளமளவென தோசை சுட்டு குவிக்கும் இவருடைய ஸ்டைலை பார்த்து போட்டியாளர்கள் பலரும் தோசை அக்ஸரா என்று பெயர் வைத்துவிட்டார்கள். போட்டியாளர்கள் அக்ஸராவை பார்த்து தோசைதான் அக்ஷராவுக்கு ஸ்பெஷல் என்று கூறியதை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

குவியும் பாசிட்டிவ் கமெண்டுகள்
வித விதமாக பல போட்டியாளர்கள் வந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக தங்களுடைய இடத்தை பிடித்து விட்டனர். நேற்றைய எபிசோட்டில் கமல்ஹாசனிடம் பலர் அக்ஸரா எங்களிடம் நன்றாக பழக வில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தாலும், இவர் வெள்ளித்திரை நடிகைகளை போல் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார். அதுவும் தன்னுடைய அந்த செல்லமான சிரிப்பினால் இளைஞர்களை தன்வசப்படுத்தி விட்டார். இந்த வார எலிமினேஷன் அவருடைய பெயரும் இருக்கின்றது. இந்த நேரத்தில் அவருக்கு இப்போதே ரசிகர்கள் கமெண்டுகளில் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications