"போன வாரம் வரை அவர் நிலைமையே வேறு ஆனால் இப்போ”... இந்த வார டாப் போட்டியாளர்கள் இவர்கள் தான்
சென்னை: பிக் பாஸ் தாரக மந்திரமே எதிர்பாராததை எதிர்பாருக்கள் தான் அதுதான் தற்போதைய வாரத்தில் நடந்திருக்கிறது.
ரசிகர்களின் மனநிலை எப்போதும் எப்படி மாறும் என்பதை யாரும் கணிக்க முடியாது என்பதை பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இந்த வாக்குகளின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த வாரம் பாசிட்டிவ் இந்த வாரம் நெகட்டிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு காரணமாகத்தான் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து விடலாம் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போதைய சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். அதில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்த போட்டியாளர் தற்போது பாசிட்டிவ் கருத்தோடு முதல் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிரள வைத்த வாக்குகள்
எதிர்பாராததை எதிர்பாரங்கள் என்று கமல் சொல்வது போல தற்போது யாரும் எதிர்பார்க்காதது நடந்து விட்டதே என்று ஒரு சிலர் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் தான் இந்த வார போட்டியாளர்களின் வாக்குகள் பதிவாகி இருக்கின்றது. இந்த வாரம் எலிமினேஷனுக்காக நாமினேசன் செய்யப்பட்ட ஐந்து போட்டியாளர்களில் டாப்பில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

கமல் செய்த கண்டிப்பு
பிக் பாஸ் சீசன் ஆறாவது சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து அசீம் சக போட்டியாளர்களிடம் சண்டையிட்டு பாடி லாங்குவேஜ் காட்டிக்கொண்டு நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அதுவும் கடந்த வாரம் நடைபெற்ற பொம்மை டாக்ஸ்கில் அவருடைய ஆட்டத்தை சொல்லவே வேண்டாம். இவருக்கும் ஆயிஷாவுக்கும் நடந்த சண்டையில் வாடி போடி என்று ஆயிஷாவை திட்டி முதல் வாரம் கமல் முன்னிலையில் இவருக்கு அறிவுரை கிடைத்தது. கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி பற்றி அவர் ஷெரினா தள்ளி விட்டதை நான் பார்த்தேன் என்று கடந்த வாரம் கூறியதால், குறும்படம் போட்டு கமல் திட்டி இருந்தார். அது மட்டுமல்லாமல் ஷிவினை இவர் ஒரு கேலி செய்ததை குறித்து சமூக வலைத்தளத்திலும் அதிகமானோர் திட்டி வந்த நிலையில் கமல் அசீமை கண்டித்திருந்தார்.

இப்போ நிலைமையே வேறு
இந்த நிலையில் இந்த வாரம் அசீம் நடவடிக்கை அப்படியே மாறிவிட்டது என்று ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் எலிமினேஷனில் இருக்கும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன் 2 லட்சத்து 30 ஆயிரத்து 60 ஓட்டுகள் பெற்றிருக்கிறார் .அவரை தொடர்ந்து அசீம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 896 ஓட்டுகள் பெற்றிருக்கிறார் .அவரைத் தொடர்ந்து கதிரவன் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஆயிஷா கடைசி இடத்தில் ஷெரினா இருக்கின்றனர். போன வாரம் வரை அசீம் நிலை வேறு ஆனால் இப்போது அசீம் வேற லெவலில் முன்னேறி வருகிறார். இதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொன்னதை நினைக்கத் தோன்றுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications