நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. பாலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி..விலை உயர்ந்த பரிசு வாங்கி கொடுத்த நபர்?
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா தற்போது ராயல் என்பில்டு பைக் வாங்கி இருக்கிறார்.
முதல்முறையாக விலை உயர்ந்த பைக்கை வாங்கி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
பாலாவிற்கு விலை உயர்ந்த பைக்கை பரிசளித்த நபரை பற்றி முதல் முறையாக தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த வெட்டுக்கிளி
விஜய் டிவியின் மூலம் பலருடைய வாழ்க்கை டோட்டலாக மாறி இருக்கிறது. அந்த மாதிரி தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பாலாவுடைய வாழ்க்கையும் மாறி இருக்கிறது. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவருடைய கவுண்டருக்கு கவுண்டர் கொடுக்கும் காமெடியின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாலா தவறாமல் இடம்பிடித்து வருகிறார். இவருடைய டைமிங் காமெடியால் பலர் சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குக் வித் கோமாளியில் பிரபலம்
பாலா அறிமுகமானது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதில் செய்யும் காமெடிகள் ரசிகர்களை கவர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது அதில் முக்கியமான ஒரு பங்கு பாலா உடையதாகவும் இருந்து வருகிறது இதனாலேயே பாலா தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டு வருகிறார்

திரைப்படங்களில் அறிமுகம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருடைய வாழ்க்கை மாறி வெள்ளி துறையில் பயணித்துக் கொண்டிருப்பது போல பாலாவும் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் பெட்ரோல் இல்லாமல் பைக்கையே தள்ளிவிட்டு போன எனக்கு புல்லட்டு பைக் கொடுத்ததற்கு நன்றி என்றும் இத்தனை நாளில் நான் ஓட்டும் முதல் புதிய பைக் இதுதான் என்றும் தற்போது வரையில் நான் செகண்ட் ஹேண்ட் பைக் தான் வைத்திருந்தேன் முதல் முறையாக இந்த பைக்கை ஓட்டுகிறேன் என்று நெகிழ்ந்து கூறியிருந்தார்.

பரிசு கொடுத்த நபர்
பாலா வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதனை விட பல மடங்கு உயரத்திற்கு செல்வீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த பைக் ராயல் என்பில்டு நிறுவனத்தில் புல்லட் ரக பைக் கொடுத்த பிளாக் ஷீப் தமிழுக்கு ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாக தன்னுடைய நன்றியை குறிப்பிட்டு இருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அடிமட்டத்தில் இருந்து ஒருவர் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பாப்புலர் நபராக மாறி இருக்கிறார் என்றால் அது எளிதான காரணம் காரியமல்ல இன்னும் உங்களுடைய வளர்ச்சியை நாங்கள் ஊக்கப்படுத்த காத்திருக்கிறோம் என்று பாலாவின் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications