டிக்கெட் டூ ஃபினாலே ஜெயிக்கப்போவது யார் தெரியுமா?? எதிர்பார்க்காத ட்விஸ்ட் தான்
சென்னை: இன்று நடக்கப்போகும் டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக போராடி கடைசியாக ஒரு வழியாக ரசிகர்களை கவர்ந்த அந்த போட்டியாளர் தான் டிக்கெட்டை தட்டி விடுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கடைசி வரைக்கும் இவர்தான் ஜெயிப்பார் என்று நினைத்தவர் இப்படி ஆகிவிட்டதே என்று பல பரிதாபப்பட்டும் வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ரசிகர்களின் ஆதரவோடு தற்போது ஒளிபரப்பாகி வரும் 5ஆவது பிக் பாஸ் சீசன் முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் இருக்கின்றன. இதில் கடைசி நேரம் என்பதால் இனி போட்டிகள் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று டிக்கெட் டூ ஃபினாலே ஜெயிக்கப்போவது யாரு என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறது. இந்த டாஸ்க் ஐ பார்த்ததும் ரசிகர்கள் இந்த போட்டியில் ஜெயிக்கும் போட்டியாளர் இவர் தான் என்று அடித்துக் கூறி வருகிறார்கள்.

தாமரைச் செல்வியின் தனித்துவம்
பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும்போது விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமலும், இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று கூறிக் கொண்டு இருந்த தாமரைச்செல்வி தற்போது பல அனுபவங்கள் இருக்கும் போட்டியாளர்களை வந்து பார் என்று மோதி கொண்டிருக்கிறார். பல நேரங்களில் இவர் விளையாட்டை இவ்வளவு நுணுக்கமாக விளையாடி வருகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவர் அவராகவே விளையாடிக் கொண்டிருக்கிறார். யாருடைய விளையாட்டையும் விளையாடவில்லை அதுமட்டுமல்லாமல் வெற்றி தோல்விகளைப் பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை என்று கூறிவருகிறார்கள்.

இருவரில் யார்?
வெள்ளந்தியான குணத்தோடு இருந்தாலும் தாமரைச்செல்வி தன்னுடைய படபட பேச்சால் அனைவரையும் வந்து பார் என்று நிற்கும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் தற்போது எப்போதுமே அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் ஒரு கேரக்டராகவும், அவர் இருக்கும் இடத்தில் பலரை சிரிக்க வைக்கும் நபராகவும் இருக்கும் ராஜுவை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஆரம்பம் முதலே இவர் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்றைய டிக்கெட்டை ஜெயிக்கப்போவது இவர்களில் இருவரில் ஒருவர்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரியங்காவின் ரசிகர்கள் கருத்து
தாமரை மற்றும் ராஜுவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட் அனுப்பி கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, பிரியங்காவின் ரசிகர்களும் வெறிகொண்டு நாங்களும் இருக்கிறோம். பிரியங்கா தான், டிக்கெட்டை ஜெயிக்கவில்லை என்றாலும் நேரடியாக களத்தில் வந்து நிற்கப் போவது என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ரசிகர்கள் ஒருபக்கமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் போட்டியில் பிஸிக்கல் டாஸ்க் வைக்காமல் மெண்டல் டாஸ்க் வைத்திருப்பதால் பிரியங்கா ஜெயிப்பதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications