நீங்க பண்ணுன வரைக்குமே போதும், வெளியே போகலாம்... ரசிகர்கள் எதிர்பார்த்த வெளியேற்றம் நடந்திருக்கு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் இரண்டாவது வார எலிமினேஷனாக ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டியாளர் வெளியேற இருக்கிறாராம்.
கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள் காரணமாக போட்டியாளர்கள் பலரும் தங்களுடைய உண்மையான முகத்தை வெளியே காட்டி இருக்கின்றனர்.
அதில் ரசிகர்கள் அதிகமாக இவரை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்த அசல் கோலார் தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

போகப் போகத்தான் புரியும்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆரம்பமாகும் முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்லுகின்ற மாதிரி தான் கைகோர்த்து கொண்டாடிய மகிழ்வார்கள். ஒரு சில நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளும் பெரிய பூதாகரமாக மாறி நீயா நானா என்று போட்டியில் அவர்களுடைய சுய ரூபம் வெளியே தெரிந்துவிடும். இது ஒவ்வொரு சீசனிலும் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு மைண்ட் கேம் தான் என்பது பலருக்கும் தெரியும்.

வெளியேறிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பலர் பயப்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு சிலர் இதில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று போட்டி போட்டு கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அதில் இரண்டு போட்டியாளர் வெளியேறிவிட்டனர் .ஜி பி முத்து, சாந்தி மாஸ்டர். அதை தொடர்ந்து இரண்டாவது வார எலிமினேஷன் நாளை நடக்க இருக்கிறது .இதில் யார் வெளியேறுவார் என்று அதிகமானார் எதிர்பார்த்து வருகின்றனர் அதற்கு காரணம் இந்த வாரத்தில் போட்டியாளர்களில் பலர் ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர்.

சில்மிஷத்தில் ஈடுபடும் போட்டியாளர்
ஒரு சில போட்டியாளர்கள் தாங்கள் செய்வது தான் சரி என்று கத்தி பேசியபடி இருக்கின்றனர் .அதில் ஒருவராக அசீம் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .ஆனால் அவரை விடவும் அசல் கோலார் ஆரம்பம் முதலே பல நெகட்டிவ் கருத்துகளையும் மீம்ஸ்களையும் பெற்று வருகிறார் .இவர் சகப் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை அனைவருடைய முகசுழிப்பையும் பெற்று வருகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண் போட்டியாளர்களிடம் அசல் கோலார் நடந்து கொள்ளும் முறையை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அசல் கோலார் தான் கடைசி இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக ஏடிகே இருக்கிறார். அவரைக்காய் தொடர்ந்து மகேஸ்வரி இருக்கிறார் . மூவரில் யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கும் போது இந்த வாரம் கண்டிப்பாக நிகழ்ச்சி விட்டு வெளியேறப் போவது அசல் கோலார் தான் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது .ஆனால் கடைசி நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன வேணாலும் நடக்கும் என்பது பல சீசன்களில் தொடர்ந்து பார்த்து வருவது தான். அதனால் நாளை நாளை தான் உண்மையான தகவல் வெளியாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications