"இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” கன்னிகா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை கன்னிகா தன்னுடைய மறக்க முடியாத நாள் என்று பழைய நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
பாடலாசிரியர் சினேகனை காதல் திருமணம் செய்த நடிகை கன்னிகா தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வருத்தமான செய்தியையும் அதோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

பல்வேறு திறமைகள்
ஒரு தொகுப்பாளராக அறிமுகமான நடிகை கன்னிகா, அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையில் அதுவும் சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் சூர்யா கேரக்டரில் இவர் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சூர்யா கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்திருந்த நிலையில், அவர் விலகவும் அவருக்கு பதிலாக இவர் நடித்து வந்தார். இந்த சீரியலின் மூலமாக இவருக்கு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியிலும் அதிகமான வரவேற்பு கிடைத்தது. ஒரு சமூக ஆர்வலாகவும்,அழகி பட்டம் பெற்ற மாடலாகவும், புத்தக எழுத்தாளராகவும், சமையல் ஆர்வலராகவும் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் கன்னிகா ரவி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

உதவியும் அதனால் காதலும்
கிராமத்திலிருந்து கன்னிகா சென்னையில் நடிகையாக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த புதியதில் அவருக்கு அனைத்துமே புதுமையாகத்தான் இருந்திருக்கிறது. அப்போது சினேகன் தான் கன்னிகாவுக்கு பல உதவிகளையும், அறிவுரைகளையும் கூறிக் கொண்டிருந்தாலும் இருந்தாராம். இவருக்கு திறமைகள் இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் ஒரு நண்பராகவும், வெல்விஷ்ராகவும் இருந்து வழி நடத்தியதால் சினேகன் மீது கன்னிகாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது . இவர்களுடைய காதலை முதலில் கன்னிகா தான் சினேகன் இடம் கூறி இருந்தாராம்.

மறக்க முடியாத நாள்
சினேகனின் வீட்டில் சினேகன் இல்லாத நேரத்தில் கன்னிகா வீடு முழுக்க விளக்குகள் வைத்து திருக் கார்த்திகை நாளில் சினேகனிடம் கையில் தாலியை கொடுத்து இவருடைய காதலை கூறியிருக்கிறார். அதை பார்த்து மிரண்டு போன சினேகன் அப்போதே அவருடைய காதலை ஏற்றுக் கொண்டாராம். இதைக் குறித்து பல முறை பேட்டிகளில் இவர்கள் கூறியிருந்தாலும், இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கன்னிகா இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இதே இடத்தில் தான் நான் நின்று கொண்டு சினேகன் இடம் என்னுடைய காதலை கூறினேன் என்று கூறியிருக்கிறார்.

தொலைந்தாலும் இருக்கும் நினைவு
மறக்கவே முடியாத காதலை குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு உருக்கமான செய்தியையும் அதில் கூறி இருக்கிறார். கன்னிகா தன்னுடைய காதலை தாலியை கையில் கொடுத்து தான் கூறியிருந்தாராம். ஆனால் அந்த தாலி ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மிஸ் ஆகிவிட்டதாம். நாங்கள் காதல் செய்ய ஆரம்பித்து ஒன்பது வருஷம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. அந்த தாலி மிஸ் ஆனாலும் அதை பத்திரமாக வைக்க வேண்டும் என்று நான் அதை போட்டோவாக எடுத்து பிரேம் பண்ணி கொடுத்திருந்தேன். அது இந்த போட்டோ தான். அதை நாங்கள் இன்னும் கவர் கூட பிரிக்காமல் பத்திரமாக வைத்திருக்கிறோம். மறக்கவே முடியாத இந்த நாள். இந்த ஒரு மகிழ்ச்சியான நாளை உங்களிடம் ஷேர் பண்ணுகிறதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று தன்னுடைய ரசிகர்களிடம் இவர் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், இவர்களுடைய திருமண ஆரம்பத்தில் அதிகமாக சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனாலும் நாங்கள் காதலித்த நேரத்தில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் இப்போது வரைக்கும் இருக்கிறோம் என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications