காட்டுக்கு ஒரு சிங்கம் அது நான் தான் கெத்தாக பேசிய அசீம்.. நெகட்டிவ் கருத்துக்களுக்கு பதிலடி
பிக் பாஸ் வீட்டிற்குள் நான் தான் சிங்கம் என்று அசீம் கூறி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு தன்னை பற்றிய நெகட்டிவ் கருத்துகளுக்கு அசீம் பதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களில் நான் தான் சிங்கம் என்று அசீம் கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு விலங்கோடு ஒப்பிட்டு பேசுகையில் தனக்கு மட்டும் கம்பீரம் எப்போதும் குறைந்து விடக்கூடாது என்று அசீம் பேசியதை குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான மீம்ஸ்கள் பரவி வருகிறது.

தவறான முன் உதாரணம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இது அசீமுடைய ரசிகர்கள் அவருக்கு கொடுத்த ஆதரவு காரணமாக கிடைத்ததாக இருந்தாலும் அதிகமான பிக்பாஸ் ரசிகர்கள் இந்த முடிவு தவறான முன் உதாரணம் என்று கருத்து கூறி வருகின்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு நேரங்களில் பிறரின் மனம் நோகும் படியும், பிறரை தாழ்த்தியும், உருவ கேலி செய்தும் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து இவருக்கு அவார்ட் கொடுத்தால் இவர்களைப் போன்று நாமளும் செய்யலாம் என்று ரசிகர்களின் மத்தியில் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று பலர் கருத்து கூறி வந்தனர்.

கடைசியில் எதிர்பாராத வின்னர்
ஆனாலும் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விக்ரமன் ரன்னராகவும்,ஷிவின் ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் வின்னரான அசீம் ஒரு வாரம் எந்த லைவ் வீடியோவிலும் வரவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ரன்னரான விக்ரமன் தொடர்ந்து பல்வேறு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களோடும் கலந்துரையாடி ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார்.

பாம்பும் கழுவும்
இந்த நிலையில் நேற்று முதல் முறையாக அசீம் லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி இருக்கிறார். அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களில் யார் பாம்பு போன்றவர் என்று கேட்டதற்கு மகேஸ்வரிதான், அவர்தான் பாம்பு எப்போதும் சீறி கொண்டு இருப்பது போல இருப்பார். அவர் முன்பு நிற்பவர்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரியாமலே மகேஸ்வரி சீறி கொண்டிருப்பார் என்று கூறினார். அதை தொடர்ந்து அந்த பாம்பையே தூக்கிவிடும் கழுகாக ஷிவின்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். ஷிவின் தன்னுடைய கருத்தை சரியான நேரத்தில் எடுத்து வைப்பார் என்று கூறினார்.

யார் அந்த சிங்கம்
அந்த வகையில் அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் முதலை போன்றவர் யார் என்று கேட்டதற்கு அது மைனா தான் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சிங்கம் என்றால் யார் என்று கேட்டதற்கு அது நான் தான் காட்டுக்குள் ஒரே ஒரு சிங்கம் தான் இருக்க முடியும். அது நான்தான். தற்பெருமைக்காக கூறவில்லை என்னுடைய தன்னம்பிக்கையால் நான் கூறுகிறேன் என்று அதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

ஒரு வாரம் எங்கே போனார்
அதை குறித்து அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். சிங்கம் என்றால் எதற்காக ஒரு வாரம் ஒளிந்துகொண்டு இருந்தார். அனைத்து எபிசோடுகளையும் பார்த்துவிட்டு பிறகு யாரைப் பற்றி எப்படி பேசலாம் என இப்ப வந்து பேசுகிறாரா ?என்று கேள்வி எழுப்ப அந்த வீடியோவில் அசீம் நான் இதுவரைக்கும் பிக் பாஸ் எபிசோடு எதுவும் பார்க்கவே இல்லை. காரணம் எனக்கு இந்த வீட்டிற்குள் நல்ல மெமரி இருக்க வேண்டும். யாரேனும் நமக்கு தெரியாமல் முதுகுக்கு பின்னாடி பேசி இருந்தால் இதில் பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கும். அதனால் நான் இந்த நட்பை தொடர வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் அதிகமான ரசிகர்கள் அசீம் பிக் பாஸ் மட்டுமல்லாமல் அனைவருடைய பேட்டியையும் பார்த்துக் கொண்டுதான் இப்படி வந்து பேசுகிறார் என்று கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications