ரசிகர்கள் எதிர்பார்த்த "வைல்ட் கார்ட் என்ட்ரி” ரட்சிதாவின் கணவர் விளக்கம்.. அடடா ரொம்ப தான் பாசம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ரட்சிதாவின் கணவர் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதைப்பற்றி விளக்கத்தை கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு தினேஷ் கடைசி நேரத்தில் கூறிய பதில் பலருக்கும் வியப்பாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகள் சின்னத்திரையின் மீனாட்சி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரட்சிதா மகாலட்சுமி கலந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகரான தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக பல வருடங்கள் கழிந்து வந்த நிலையில் தற்போது ஒரு சில மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா கலந்து கொண்டு இருக்கிறார் .இதைக் குறித்து ஆரம்பம் முதல் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார் அவருடைய கணவர்.

மனைவியைப் பற்றிய புரிதல்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ரட்சிதாவிடம் சக போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் பார்க்க விதம் முகம் சுளிக்கும் விதமாக இருந்து வருவதாக ரசிகர்கள் பலர் காண்டாகி கருத்து கூறி வருகின்றனர் ஆனால் அதைக் குறித்து தினேஷ் எனக்கு ரட்சிதாவை பற்றி நன்றாக தெரியும் .எவ்வளவோ போராட்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அதனால் பல பேர் இருக்கும் ஒரு இடத்தில் தேவையற்ற மன கசப்பு வேண்டாம் என்று தான் அமைதியாக இருக்கிறார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் சில இடங்களில் வரம்பு மீறும்போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து விலகிக் கொண்டுதான் இருக்கிறார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கேள்விகளுக்கு தினேஷ் விளக்கம்
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் வைல்ட் கார்ட் என்ட்ரி யாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் என்று பலர் கருத்து கூறி ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் ராபர்ட் மாஸ்டரின் கேரக்டர் மாறிவிடும் என்றும் அதுபோல தினேஷ் தனக்கு வெளியே எவ்வளவு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது ரட்சிதாவுக்கு தெரியாது அந்த நிலையில் ரட்சிதா தினேஷிடம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று பலர் ஆர்வத்தோடு கருத்து தெரிவித்து தினேஷை டேக் செய்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தான் கலந்து கொள்கிறேனா இல்லையா என்பதை பற்றி விளக்கமாக ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

இதுதான் காரணம்
ஒரு சிலர் தரங்கெட்ட செயலில் நடந்து கொள்வதால் தனக்கு என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளாமல் சிலர் நடந்து கொள்வது, நாம் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்து போவதில்லை. அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நான் சென்றாலும் உள்ளே என்ன மாதிரி விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறதோ அதேபோலத்தான் போகும் நாம போனதும் அவர்கள் மாறிவிடப் போவதில்லை. அதுபோல தனக்கு இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு டைமும் இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நிகழ்ச்சியில் தான் நடித்து வருவதாகவும், அதுபோல புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியலிலும் தான் நடிக்க இருப்பதால் தனக்கு நேரம் அதற்கு தான் சரியாக இருக்கிறது. என்னால் தொடர்ச்சியாக 30, 40 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்க முடியாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications