செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில்.. உடனே பணி தொடங்கிடுக.. ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல்.பயோடெக்கின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த தடுப்பூசி பூங்கா சுமார் ரூ. 600 கோடி செலவில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படாமல் முடங்கியுள்ளது. இங்கு 585 மில்லியன் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்.செயல்படாமல் இருக்கும் இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இங்கு தடுப்பூசியை உறபத்தியை மீண்டும் தொடங்கலாமா? எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்? இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ' செங்கல்பட்டு #HLLbiotech நிறுவனத்தின் #Vaccine ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டேன். தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
உளவுத்துறையில் கூட கை வைக்கல.. டெல்லி மீது எடப்பாடி ஏக டென்சன்.. திமுகவிற்கு கிடைத்த ஃப்ரீ ஹேண்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications