சரிந்து போன ஜீ தமிழ் டிஆர்பிஐ தூக்கி நிறுத்திய சீரியல்... இனி போட்டி சன் டிவி சீரியலுக்கு தானா?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் டிஆர்பியில் முன்னேறி வருகிறது.
சென்னை: ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல்க்கு பிறகு டிஆர்பி அதிகமாக குறைந்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் செம்பருத்தி சீரியலில் நடித்த அதே கார்த்திக் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்கள் கழித்து தற்போது டிஆர்பி இந்த சீரியலுக்கு அதிகரித்து, இந்த வாரத்தில் டாப் 10 இடத்திற்குள் வந்திருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த சேனல்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் டிஆர்பியின் அடிப்படையில் தான் மக்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறதா? என்று கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த டிவி சேனல் என்றால் அது சன் டிவியாகத்தான் இருக்கும். இந்த சேனலுக்கு ஒளிபரப்பாகும் சீரியலுக்கு பல வருடங்களாகவே ரசிகர்களின் மத்தியில் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அதுவும் இரவு நேர சீரியல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த சீரியலில் சேனலில் ஒளிபரப்பானாலே சீரியல்கள் ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதிக மவுசு
ஆரம்ப காலத்தில் சன் டிவியில் தான் அதிகமான சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. அதற்கு பிறகு தான் அதற்கு போட்டியாக பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பாகி தொடங்கப்பட்டு அதிலும் புதிய புதியதாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சன் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர் கார்த்திக் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக ஷபானா நடித்திருந்தார். இது ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டு வந்த நிலையில் டிஆர்பியும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் திடீரென இந்த சீரியலை விட்டு கார்த்திக் விலகி இருந்தார். அதற்கு பிறகு டிஆர்பியில் அடி விழ தொடங்கிவிட்டது. செம்பருத்தி சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் எந்த ஒரு சீரியலும் அந்த அளவிற்கு டிஆர்பியில் முன்னணியில் வரவில்லை.

டிஆர்பியில் முன்னேற்றம்
இந்த நிலையில் மீண்டும் கார்த்திக் ஜி தமிழில் புதிய சீரியலில் அறிமுகம் ஆகி இருந்தார். கார்த்திகை தீபம் எனும் சீரியலில் கதாநாயகனாக மீண்டும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில மாதங்களாகவே இந்த சீரியல் டிஆர்பியில் பின்னோக்கி தான் இருந்தது. சிறு சிறு முன்னேற்றம் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த சீரியல் அதிகப்படியான முன்னேற்றம் அடைந்து மொத்த சேனல்களின் டாப் 10 சீரியல்களில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு இந்த சீரியல் ஜீ தமிழ் சீரியலில் கூட இரண்டாவது இடம் மூன்றாவது இடத்தில் தான் இருந்து வந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

போட்டி பெருசா இருக்கு
இந்த நிலையில் ஒன்பது மணிக்கு சன் டிவியில் இனியா சீரியலும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலும் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலை முந்தி கார்த்திகை தீபம் சீரியல் டிஆர்பியில் அதிகரித்திருக்கும் நிலையில், அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் தற்போது வரைக்கும் நான்காவது இடத்தில் இருந்து வரும் நிலையில் இனி அதையும் முந்திவிடும் என்று சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது கார்த்திக்கு திருமணம் யாரோடு என்ற பரபரப்பான திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் அடுத்த வாரத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications