For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளிடம் தமிழ் இலக்கியத்தை சேர்க்கும் முயற்சியாக இணைய வழி திருக்குறள் மேட்ரிக்ஸ் 2020 போட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, பெருமைகளை உலகறிய செய்யும் புதிய முயற்சியாக திருக்குறள் மேட்ரிக்ஸ் 2020 என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன உலகத்துக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமையை எடுத்துச் செல்வதற்கு, இன்றைய குழந்தைகளிடமும் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் திறனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொள்ள போட்டியாளருக்கு குறைந்தபட்சம் ஏதேனும் 3 அதிகாரக் குறட்பாக்கள் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். போட்டி 3 முதல் 133 நிலைகளாக நடத்தப்படும். மேலும் போட்டியில் தனிநபராகவோ ஒரு குழுவாகவோ கலந்து கொள்ளலாம்.

Thirukkural Matrix 2020 for children

முதலில் போட்டியாளர்கள் ஏபிசி மேட்ரிக்ஸ் தளத்தில் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

உலகத்தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருக்குறள் மேட்ரிக்ஸ் போட்டி சரியாக 20 நிமிடங்கள் நடத்தப்படும்.

இதில் உலகில் எந்த இடத்தில் இருந்தும் வலைத்தளம் வழி பங்கு பெறலாம்.

போட்டியின் முடிவில் 20 வெற்றியாளர்களுக்கு டாப் 10 உள்ளரங்கு, டாப் 10 வெளியரங்கு என்று விளம்பரதாரர் பரிசு கொடுக்கப்படும்.

பங்கு பெரும் அனைவருக்கும் மின் சான்றிதழ் கொடுக்கப்படும்.

போட்டி தொடங்கியதும், படத்தில் இருப்பது போல், திருக்குறள் நூலில் போட்டியாளர் தேர்வு செய்த அதிகப்பட்ச அதிகார எண்ணிற்குள் கேள்விகள் கேட்கப்படும்.

போட்டியில் ஒரு அணி என்பது மூன்று அதிகாரம் மற்றும் மூன்று திருக்குறளை உள்ளடக்கியதாகும்.

போட்டியாளர் படத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்ட திருக்குறள் அதிகாரத்தின் எண்ணைத் தொடர்ந்து திருக்குறள் வரிசை எண் மற்றும் அத்திருக்குறள் இடம்பெறும் அதிகாரத்தின் வரிசை எண் என்றனைத்தும் ஒரே எண்ணாகப் பதிவு செய்ய வேண்டும்.

இருபது நிமிடத்தில் இந்த போட்டி தானாக முடிவிற்குவந்து தேர்ச்சியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

பங்குபெற்ற அனைவரின் வசிப்பிடம் சார்ந்த அணிப்பெயர்கள் காட்சிமைப் படுத்தப்படும்.

இப்போட்டி உலகத்தமிழ் அமைப்புகளின் நட்புறவை வளர்க்கவும், தமிழறிவு விளையாட்டு போட்டிகளுக்கு ஒரு தளமாக அமைக்கவும் நாம் இணைந்து செயல்படவேண்டிய தருணம் இது.

பல்வேறு சர்வதேச தமிழ் அமைப்புகள் திருக்குறள் மேட்ரிக்ஸ் நிகழ்ச்சியைத் தங்கள் 2021 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளில் நடைமுறைப் படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரியாத் தமிழ்ச்சங்கம் சித்திரை மாதத்தில் சவூதி அரேபியாவில் திருக்குறள் மேட்ரிக்ஸை அறிமுகப் படுத்துகிறார்கள் என்பது சிறப்பு செய்தி.

சர்வதேச தளத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்வு தற்போது தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அரபிக் ஆகிய மொழிகளில் நடக்கவிருக்கிறது.

2021ஆம் ஆண்டுக்குள் 108 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது எம் இலக்கு. இவ்வாறு ஏபிசி மேக்ட்ரிக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

English summary
Here is an article on Thirukkural Matrix 2020 for children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X