அடுத்த மூவுக்கு தயாராகும் ஸ்டாலின்! கண்ணூர் மாநாடு ஜனநாயக முன்னணியை உருவாக்கும் என நம்பிக்கை
திருவனந்தபுரம்: கண்ணூரில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக முன்னணியை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு இன்று நிறைவடைந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட பாஜக முயற்சி
இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அந்த மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "பாஜக அரசு வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட நினைக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம்
ஆங்கிலேயர்கள் கூட இத்தனை அதிகாரம் மிக்க ஒற்றைத் தன்மையை கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என மாற்ற மத்திய பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பாஜக அரசு பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது.

தென்மாநில முதல்வர்கள் குழு
மாநிலங்களின் உரிமைகளுக்காக போராட தென் மாநில முதலமைச்சர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள இந்த குழு வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய முயல்வதுதான் சட்டத்தின் ஆட்சியா? ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இரு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி." என்றார்.

ஜனநாயக அமைப்புகளின் முன்னணி
இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கண்ணூர் மாநாடு பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், ""கண்ணூர் மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்புகளின் முன்னணியை உருவாக்கும். கண்ணூர் மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய நம்பிக்கையை தரும் என நம்புகிறேன்" எனக்குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications