வேற வழியே இல்லை.. கொன்னு எரிச்சுருவோம்! திடீர் முடிவெடுத்த கேரளா அரசு! என்ன காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடுபுழா, கரிமண்ணூர், சாலச்சேரியில் உள்ள பண்ணையை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் ,மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட இரு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 276 பன்றிகளை எரித்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை பாதிப்போடு, பறவைக் காய்ச்சலும் சேர்ந்து மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளையும், மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மற்றொரு சிக்கல் உருவாகியிருக்கிறது. அதாவது குரங்கு காய்ச்சல், தக்காளி காய்ச்சலோடு, அங்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலும் பரவி வருகிறது.

கேரளா

கேரளா

இந்நிலையில் கேரளாவில் உள்ள இரு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வளர்ப்பு பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாக கருதப்படுகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் பீகார் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்

இதனை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கேரள அரசும் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது. இருந்த போதும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் கேரளாவுக்கு பரவி உள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரள மாநிலம் தொடுபுழா, கரிமண்ணூர், சாலச்சேரி ஊரில் உள்ள இரண்டு பன்றிகள் வளர்க்கும் பண்ணைகளில் பல பன்றிகள் அடுத்தடுத்து கூட்டமாக இறந்ததாக கூறப்படுகிறது.

சோதனையில் அதிர்ச்சி

சோதனையில் அதிர்ச்சி

இந்த இடத்திற்கு சென்ற உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் கோபாலில் உள்ள உயர் விலங்கு தேசிய நிறுவனத்திலும் இறந்த பன்றிகளின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்குள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.

பன்றிகளை கொல்ல முடிவு

பன்றிகளை கொல்ல முடிவு

சாலச்சேரியில் உள்ள பண்ணையை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட இரு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 276 பன்றிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை போல் அல்லாமல் கொல்லப்பட்ட பன்றிகளை எரிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேரள மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக வாத்துகளும் கொல்லப்பட்ட நிலையில், தற்போது பன்றிகளும் கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+