"லெஸ்பியன்".. மல்லுக்கட்டிய தோழிகள்.. "ஆண்வாசம்" பகீர்.. ஓரினச்சேர்க்கை குற்றமல்ல.. கோர்ட் அதிரடி

லெஸ்பியன் தோழிகளை ஒன்றாக வாழலாம் என்று கேரளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட, 2 பெண்களை ஒன்றாக வாழலாம் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வழக்கின் பின்னணி என்ன என்று பார்ப்போம்..!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ளது ஆலுவா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா... இருவருமே ஒரே சமூகம்தான். இருவரின் பெற்றோரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.

அதனால், இவர்கள் சந்திப்பு நடந்ததே சவுதியில்தான்.. 11ம் வகுப்பு படிக்கும்போதுதான் நூராவை சந்தித்தார் ஆதிலா.. பார்த்த உடனேயே இருவருக்கும் பிடித்துவிட்டது.. இருவருமே உயிருக்கு உயிராக நட்பை பாராட்டினர்

 உணர்வுகள்

உணர்வுகள்

இந்த நட்பு காதலாக மாறும் என்று அப்போது அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை.. இருவராலுமே ஒருவர் மீதான ஒருவரின் காதல் உணர்வை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.. ஒருநாள் பார்க்காவிட்டாலும், அதன் துயரம் இருவரையுமே வாட்டியது.. இதற்காக இருவரும் தனியாக தங்க ஆரம்பித்தனர்.. இது லெஸ்பியன் உறவாக மாற எளிதாக வழிவகுத்தும் விட்டது.. நாள் ஆக ஆக, ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரின் லெஸ்பியன் உறவு மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தது..

பாத்திமா

பாத்திமா

இரு வீட்டு உறவினர்களும் இப்படி ஒரு உறவை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர்.. இதில், பாத்திமாவை கேரளாவுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.. இந்த விஷயம் தெரிந்ததும், ஆதிலா டென்ஷனாகிவிட்டார்.. அதனால், பாத்திமாவை தேட ஆரம்பித்தார்.. இறுதியில், கேரளாவில் கண்டுபிடித்தும் விட்டார்.. இப்படியே விட்டால், குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்று 2 பேருமே பயந்தார்கள்.. அதனால், கடந்த மே 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கினர்..

 நொந்து போன ஆதிலா

நொந்து போன ஆதிலா

ஆனால், அவர்கள் தங்கி இருந்த இடத்தை, பாத்திமாவின் உறவினர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.. மறுபடியும் பாத்திமாவை அங்கிருந்து பிரித்து, வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.. இப்போது ஆதிலா நொந்து போனார்.. இதை பற்றி சொல்லும்போது, "பாத்திமா வீட்டில் வந்தார்கள்.. அவளை நல்லபடியாக பார்த்து கொள்கிறோம் என்று சொல்லிதான் ஆலுவாவுக்கு அழைத்து சென்றனர்.. ஆனால், அவளை உடல் ரீதியாக காயப்படுத்தியிருக்கிறார்கள்" என்று கலங்கி சொன்னார்.

 பாத்திமா கண்ணீர்

பாத்திமா கண்ணீர்

இதையடுத்து, பாத்திமாவை எங்குமே அந்த குடும்பத்தினர் வெளியே விடவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆதிலா தங்கள் மகளை கடத்தினார் என்று பாத்திமா குடும்பத்தினர் போலீசில் புகார் தந்தனர்.. ஏற்கனவே பாத்திமாவை பிரித்து கொண்டு போன சோகத்தில் ஆதிலா இருந்தபோது, இந்த புகார் அவரை மேலும் நிலைகுலைய வைத்தது.. அதனால், தாமும் பதிலுக்கு போலீசுக்கு போனால், பாத்திமா வீட்டில் எதையும் செய்வார்கள் என்பதால், ஸ்ட்ரைட்டாக கோர்ட்டுக்கே போய்விட்டார் ஆதிலா.

 கேரள ஹைகோர்ட்

கேரள ஹைகோர்ட்

தன்னுடைய தோழியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் என்றும் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்... அத்துடன் தங்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதால், தாங்கள் சேர்ந்து வாழ போவதாகவும், அதற்கு கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டார் ஆதிலா. இந்த மனுவைதான், கேரள ஹைகோர்ட்டு தற்போது விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது..

 தோழிகள்

தோழிகள்

இந்த வழக்கு நடக்கும்போது, சம்பந்தப்பட்ட 2 பெண்களை தவிர வேறு யாரையும் ஆஜராக நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.. ஆதிலாவும் நூராவும் மட்டுமே கோர்ட்டில் நின்றனர்.. "நீங்க 2 பேரும் ஒன்றாக வாழ விரும்புகிறீர்களா?" என்று கோர்ட் கேட்டது.. இருவருமே ஒன்றாக ஆமாம் என்று திடமாக சொன்னார்கள்.. இதையடுத்து ஆதிலா நஸ்ரின் மற்றும் அவரது தோழி பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அதிரடியாக அனுமதி தந்தது.

 அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

அதுமட்டுமல்ல, அந்த தோழிகள் ஒன்றிணைந்து வாழும்போது, உறவினர்கள் யாரும் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.. லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று கூறி ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கையும் முடித்து வைத்தது நீதிமன்றம்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

இந்த தீர்ப்பு குறித்து ஆதிரா சொல்லும்போது, "நாங்க லெஸ்பியன்தான்.. ஆனால், சொந்தக்காரர்கள் என்னைக் கேலி செய்றாங்க.. ரொம்ப கேவலமாக நடத்துறாங்க.. ஓரினச்சேர்க்கை ஒரு மனநல கோளாறு... ஆனால், இதை பெரும்பான்மையான மக்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.. அதனால்தான், நாங்கள் கடுமையான எதிர்ப்புகளை எங்களை சார்ந்தோரிடம் இருந்தே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்கிட்ட இருந்து பாத்திமாவை கடத்தி சென்றதும், நான் உடைந்து போனது உண்மைதான்.. ஆனாலும் அவளை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தினேன்..

 ஆண் வாசம்

ஆண் வாசம்

இதற்கு நடுவில், பாத்திமாவின் மனசை மாற்ற அவர்கள் குடும்பத்தினர் நிறைய முயற்சிகளை செய்தனர்... எப்படியாவது, தன் மகளை "ஆண் வாசம்" பிடிக்க வைத்து, அவளது பாலியல் எண்ணங்களை மாற்றும் முயற்சியில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், பாத்திமா அசரவில்லை.. நான்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.. அந்த உறுதியை பார்த்துதான், நான் கோர்ட்டில் மனு செய்தேன்... இன்று கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பை தந்துள்ளது..

 பொதுமக்கள்

பொதுமக்கள்

கோர்ட் இப்படி ஒரு தீர்ப்பை தந்தாலும், இந்த சமூகமும், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்ததை மறுக்க முடியாது.. இத்தனை வருடகாலமாக, நாங்கள் சேர்ந்திருந்தபோது பெற்றோர் என்ன சொல்வார்கள், இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா? என்றெல்லாம் சந்தேகம் இருந்தது... இப்போதுதான் நிம்மதியாக இருக்கு.. அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வந்துட்டோம்.. இனி சந்தோஷமாக எங்கள் வாழ்க்கையை தொடங்குவோம்..

 இணைந்த தோழிகள்

இணைந்த தோழிகள்

ஒன்றாக படித்தோம், ஒன்றாக சுற்றினோம்.. ஒன்றாக இணைந்துவிட்டோம்.. நாங்கள் இன்று இந்த அளவுக்கு உறவில் வலுவாக இருக்கிறோம் என்றால், அதற்கு காரணமே எங்களை சுற்றியுள்ளோர் காட்டிய எதிர்ப்புதான்.. அதுதான் எங்களை சேர்த்து வைத்துள்ளது" என்றார்.. நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு இரு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், தோழிகள் இருவரும் துள்ளி குதித்து கரம் கோர்த்துள்ளனர்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+